உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் தமிழ் வளம்

175

ஒற்றைக்காலில் நின்று வாங்கிவிட்டான்” என்பது வழங்குமுறை. இதில் இருந்து ‘நட்டணை' என்பதற்குக் கெடுபிடியாக நிறை வேற்றல், முறைகேடு, வன்புக்கு நிற்றல் எனப் பொருள்கள் உண்டாயின.

'நட்டணை செய்யாதே; சொன்னால்கேள்' என்னும் கட்டளையில் இருந்தே நட்டணை, சொல்லுக்குக் கட்டுப் படாதது என்னும் பொருள் தருவதாயிற்றே.

கால் மேல் கால்போடுதல் அவைக்குப் பொருந்தா நிகழ்ச்சி எனப்படுவதுடன் செருக்குக்கு அடையாளமாகவும் நாட்டுப்புற மக்களால் இன்றும் கருதப்படுகிறது. வள்ளலார் அஞ்சியவற்றுள் ஒன்று கால்மேல் கால் வைத்திருத்தல்:

“காட்டுயர் அணைமேல் இருக்கவும் பயந்தேன்; காலின்மேல்கால் வைக்கப் பயந்தேன்; பாட்டயல் கேட்கப் பாடவும் பயந்தேன்;

பஞ்சணை படுக்கவும் பயந்தேன்;

நாட்டிய உயர்ந்த திண்ணைமேல் இருந்து

நன்குறக் களித்துக்கால் கீழே

நீட்டவும் பயந்தேன் நீட்டிப் பேசுதலை

நினைக்கவும் பயந்தனன் எந்தாய்!”

வள்ளலார் பாடிய பிள்ளைச் சிறு விண்ணப்பத்துள் ஒன்று இது.