உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. பல்

பற்று என்பது ‘பல்' என்பதன் வழியாக வந்த சொல் பல் என்பதன் பொருள் என்ன?

‘பல்' என்பது வெண்மை குறித்த சொல். ‘பல பல' என விடிந்தது என்னும் வழக்கிலும், ‘பால்' என்னும் சொல்லிலும் வெண்மைப் பொருள் உளதாதல் அறிக. பல், பால் என்பவை போலக், கல், கால் என்பவை கருமைப் பொருள் தருதலையும் ஒப்பிட்டுக் காண்க.

பல் என்பது ‘பள்' எனத் திரிந்தும் வெண்மைப் பொருள் தருதலைப் பளபள, பளப்பளப்பு, பளிச்சிடல் என்பவற்றிலும் பளிக்கு, பளிங்கு என்பவற்றிலும் காண்க. இவ்வாறே கல் என்பது 'கள்' எனத் திரிந்து கருமைப் பொருள் தருதலைக் களம், களவு, களர், கள்ளம், கள்வன் முதலிய சொற்களைக் கொண்டு தெளிவு செய்து ஒப்பிட்டுக் கொள்க.

வெண்மைப் பொருள் தரும் 'பல்' பின்னர்ப் பன்மைப் பொருள் தருவதாய் விரிந்தது. எப்படி,

உடற் பொறிகளை மெய், வாய், கண், மூக்கு, செவியென எண்ணுவர், இவற்றுள் வாயின் உள்ளுறுப்புகளில் ஒன்றாகியது பல். இதனைப் பெருக்கல் வாய்பாடுபோல, "எண்ணான்கு முப்பத்திரண்டு பற்காட்டி” என்கிறது ஒரு தனிப்பாட்டு.

66

கண்கள் இரண்டு; காதுகள் இரண்டு; ஆனால் பற்களோ முப்பத்திரண்டு. அமையும், கண்கள் காதுகள் போலத் தனித் தனி நின்றன அல்ல, தொடுத்துப் பத்தியாய் அமைந்துள்ளன. 'முல்லையரும்பையோ முத்தையோ கோத்து வைத்த கோவை என்ன உவமைத் தொடைபடக் கூறப்படுவனவாயின. இப் பல்லின் வரிசையே 'பல' வென்பதை அல்லது பன்மையை வழங்கும் குறியாயிற்றாம்.

உழவுக் கருவிகளுள் ஒன்று ‘பலகுச் சட்டம்'; அதனைப் பயிரூடு அடித்தலைப் ‘பல கடித்தல்' என்பர். ‘பலகு' பலுகு' 'பலகு'பலுகு