உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

இளங்குமரனார் தமிழ்வளம்

15

வெடிப்பைக் குறிக்கும். ‘பருத்திச் சுளை' எடுப்பார்க்குப் பருத்தியே கூறிட்டுக் 'கூலி'யாகத் தருதல் வழக்கம் பருத்தி எடுக்கப் பட்ட ‘கொலுக்கு' பல் பல்லாக இருக்கும். முள்ளைப் போல் குத்தவும் செய்யும். அதனை உணர்ந்து பருத்திக்குப் பல் எனப் பெயர் வைத்தனர். அது ‘பன்' எனவும் ‘பன்னல்' எனவும் இலக்கண இலக்கியங்களில் குறிக்கப்படுகிறது.

“மின்னும் பின்னும் பன்னும் கன்னும் அந்நாற் சொல்லும் தொழிற்பெயர் இயல்"

என்பது தொல்காப்பியம் (345). "பன்னல் வேலிப் பணைநல் லூரே

என்பது புறநானூறு

(345)

பருத்தி, வேலிப் பயிரோ என்பாராயின், ‘பருத்தி வேலிச் சீறூர்” என்னும் புறநானூறு தெளிவிக்கும் (299). இந்நாளில் 'வேலிப் பருத்தி' என ஒரு பருத்தி வேலிப் புறங்களில் இருத்தல் அறிக.

‘பன்' ஆகிய பருத்தியில் இருந்து எடுக்கப்பட்ட நூல் பனுவல் எனப்பட்டது பின்னர். அவ் ஆடை நூலைக் குறித்த ‘பனுவல்’, அறிவு நூலைக் குறித்தது.

“பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாகச்

செஞ்சொல் புலவனே சேயிழையா - எஞ்சாத கையேவா யாகக் கதிரே மதியாக

மையிலா நூன்முடியு மாறு

என்று பனுவலை ஒப்பிட்டுப் பகர்கின்றது நன்னூல்.

(24).

பல் ‘பன்' ஆகுமா? கல் ‘கன்' ஆனதே! கன்மாப் பலகை. எனச் சங்கப் பலகை வழங்கப் பெற்றதே!

பல் பல்லாய் அமைந்த அறுவாள் ‘பன்னறு வாள்' எனப் படுவதையும், அதன் பற்களைக் கூராக்குவதைப் ‘பன்னு வைத்தல்' எனப்படுவதையும் நாட்டுப் புறங்களில் நன்கு அறியலாம்.

பலமொழி வல்லார் பன்மொழிப் புலவர் எனப் படுதலையும் பல்கால் சொல்லியதையே சொல்லுதல், ‘பன்னுதல்’ ‘பன்னிப் பன்னிப் பேசுதல்' என்று வழங்கப் படுதலையும் தெளிக.