உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் சொல்

201

பனை என்னும் தொல்புகழ் மரத்தை அறிவோம். தென்னை, புன்னை என்பவை போலப் பன்னை என்பதே. அதன் மூத்த பெயராக இருந்து இடைக்குறை எய்தியிருக்க வேண்டும். குமரிக்கண்ட நாளிலேயே, 'ஏழ்பனை நாடு' பேசப்படுதலாலும், பனைக் கொடியும் பனம்பூமாலையும் சேரர்க்குரியவை ஆதலாலும் அவற்றைத் தொல்காப்பியமும் சுட்டுதலாலும் ‘பனை' என்னும் வடிவம் மிகப் பழமையே வந்துவிட்டது என்பதைக் கொள்ள வேண்டும். எவ்வளவு காலம் கடந்தாலும் சில அடி மூலங்கள் உண்மையை விளக்கி உறுதி செய்து விடுகின்றனவாம்!

பதனீரை வடித்தற்குப் பயன்படுவது பன்னாடை. அது பனை மடலைச் சூழ்ந்து வலை போல் இருக்கும் நார் ஆடையைக் கூட்டிப் பிடித்து அமைத்ததாம். 'பன் ஆடை "பன்னாடை ஆயிற்று. இழை கலக்கமான உடையையும் நெய்யரியையும் பன்னாடை என்பதும் வழக்கம்! பன்னாடையில் அமைந்துள்ள ‘பன்', ‘பன்னை' என்பதன் முந்தை மூலம் காட்டுவதாம். தென்னை ஓலை ‘தென்னோலை' ஆனாற் போலப் பன்னை ஆடை பன்னாடை' ஆயிற்றாம். தென்னவன் கூடலில் ஒரு தெரு 'தென்னோலைக் காரத்தெரு' என்பது.

-

பனைக்கும் பல்லுக்கும் என்ன தொடர்பு? பனையின் அடிமரப் பரப்பெல்லாம் பல்பல்லாய் செறும்பு உடைய தாய் இருப்பது பொருள் விளக்கம் செய்வதாம். 'இரும்பனஞ் செறும்பு, என்னும் அகநானூறு (277) செறும்பு 'சிறாம்பு என வழக்கில் உள்ளது. ‘சிம்பு’ என்பது கொச்சை வழக்கு.

பல் தொடர்பால் பல்லி பெயர் பெற்றது போலவே, பன்றி என்பதும் தொடர்பால் பெயர் பெற்றதேயாம். பல் + F = பன்றி. தி கடைவாய் ஓரங்களில் நெடும் பல் அல்லது கோரைப் பல் இருந்த காலத்தில் அதற்குச் சூட்டப் பெற்ற பெயர் பன்றி. கோரையின் குருத்து நீளல் இயற்கையை நோக்கிக் காண்பார். 'கோரைப்பல்’ என்னும் பெயரீட்டு விளக்கமும் காண்பார். யானையின் நெடும் பல்லாம் கொம்பு தேயாமல் நிலைத்தது. பன்றிக்கோ தேய்ந் தொழிந்தது. கோரைப் பல், மாந்தர்க்கும் முந்தையுடைமையாக இருந்ததைப் பழஞ் சிற்பங்கள் பறையறையவில்லையா! பன்றிக்கு 'வல்லுளி' என்னும் பெயர் உண்மையையும், யானையைக் குறிக்கும் 'கோட்டுமா என்னும் பெயர் பன்றியையும் குறித்தலையும் அறியின், பெயரின் பொருள் விளக்கமாம்.

பல் என்பது பத்தின் மூலமாம், பல் + து = பஃது; பத்து ஆயிற்று. 'பல்' ‘பன்' என ஆகியும் பத்தைக் குறிக்கும். ‘இருகை

-