உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

இளங்குமரனார் தமிழ்வளம்

15

விரல்களையும் எண்ணத் தெரிந்து கொண்ட காலத்தில் அதுவே பலவற்றுள் உச்ச எண்ணாகக் கருதி வைக்கப்பெற்ற பெயராம். ‘பஃது’, பத்து' என்னும் இருவகை ஆட்சிகளும் பண்டை நூல்களிலே இடம் பெற்றிருத்தலும் 'பன்னிரண்டு' என்பதிலே ‘பன்' என்னும் வடிவே பத்தினைக் குறித்து நிற்றலும் எண்ணுக. இனிப் ‘பன்னொருவர், எனப் பரிபாடல் கூறுவதும் (8) ‘பன்னொன்று என அருகலாக வழக்கில் உள்ளதும் இணைத்துக்

காணலாம்.

இனிப் பஃது பத்து ஆகுமோ? என்பார் உளரெனின், 'அஃகுள், ‘அக்குள்; ‘அஃகம் அக்கம்' என வருவனவற்றைக் கருதுவாராக.

பெருநீர்ப் பெருக்குடைய குமரிக் கண்டத்தோர் ஆறு ‘பஃறுளி' என வழங்கப் பெற்றது அறிஞர் அறிந்தது. பல துழி’ என்பதே ‘பஃறுளி' என்பதும், 'பல துளி பெரு வெள்ளம்’ என்பதும் எவரே அறியார்?

பல துளி பஃறுளியானது போலவே, பல தாழிசை பஃறாழிசையாகவும், சில தாழிசை, சிஃறாழிசையாகவும் கொச்சகக் கலிப்பா வகையில் இடம் பெற்றமை யாப்பியல் வல்லார் கோப்புற அறிந்தவையாம்.

பஃறி என்பது படகைக் குறிக்கும் சொல். ஆனால், ஒரு படகைக் குறிக்காமல் பல படகுகளைக் குறிக்கும் தொகுதிச் சொல் என்பது பஃறி. என்பதன் வேர் புலப்படுத்துகின்றது. பல் + தி = பஃறி.

பல படகுகளைக் குறிப்பது பஃறி' என்பதற்குச் சான்று உண்டோ எனின் உண்டு' என்பதாம். கழக இலக்கியங்களில் பட்டினப்பாலையில் மட்டும் ஒரோ ஓர் இடத்தில் (3) ஆளப் பட்டுள்ள சொல் பஃறி அது.

"கொழும்பல்குடிச் செழும்பாக்கத்துக் குறும்பல்லூர் நெடுஞ் சோணாட்டு

வெள்ளை யுப்பின் கொள்ளை சாற்றி

நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி,

பணைநிலைப் புரவியின் அணைமுதற் பிணிக்கும்”

என்பது. “பந்தியிலே நிற்றலையுடைய குதிரைகளைப் பிணிக்குமாறு

போலச்சார்ந்த தறிகளிலே

பிணிக்கும்

என்கிறார்