உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. பற்று

பல்+து=பற்று. பல்லால் இறுக்கிப் பிடித்தல். பற்றுதல் எனப்பட்டது. கொல் + து - கொற்று; புல் + து - புற்று என்பவை எண்ணத்தக்கன.

பற்பிடிப்பாலும் பற்கடிப்பாலும் அமைந்த பற்று என்னும் சொல், ஒரு பெரிய தாய் ; அவள் பெற்ற பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் மிகப் பலர், அவள் இன்னும் பெற்றுப் பெருவாழ்வு கொள்ளும் பேரரசியாகவே விளங்கி வருகிறாள்; மேலும் விளங்கியும் வருவாள்.

உடும்பைப் பிடித்து அதன் வாலை வாய்க்குள் தந்து விட்டால் விடாமல் பற்றிக் கொண்டு ஒரு வளையம்போல் கிடக்கும். அப்படிக்கிடக்கும் பல உடும்புகளை ஒரு கோலில் போட்டுத் தூக்கிக்கொண்டு வருதல் வேட்டைக்காரர் வழக்கம்.

தன் சிறுவடிவுக்கு ஒவ்வாத பெரும் பல்லுடைமையால் பெயர் பெற்றது பல்லி; பல் நீண்டவரைப் பல்லன், பல்லாயி என வழங்குவது இல்லையா!

14-7-78 இல் இரவு 7.55 க்கு இரண்டு பல்லிகள் போரிடத் தொடங்கின! அவற்றின் போர் மூன்றாம் பல்லி ஒன்றன் முனைந்த தாக்குதலால் 9.25 க்கு வெற்றி தோல்வியின்றி முடிந்தது! பல்லியின் பற்போர், எருதுப்போர், கடாப்போர், சேவற்போர் ஆகியவற்றுக்குச் சற்றும் இளைத்த தன்று.

புலி முதலிய கொடுவிலங்குகள் பற்றுதலும் அலைத்தலும் தாலைத்தலும் செய்ய வாய்த்த கருவி ‘பல் தானே; பல் இல்லையேல் பற்றுதல் ஏது? பற்றின் மூலம் ‘பல்' என்பதை இவையெலாம் விளக்கும்! அம்மட்டோ! நாயும் பூனையும் குட்டிகளை வாயால் பற்றிக்கொண்டு செல்லுதலைப் பாரார் எவர்? மாந்தரும் பல்லால் பற்றுதலும் இழுத்தலும் கடித் தலும் பிடுங்குதலும் விலங்கு போலக் கடித்துக் குதறுதலும் இல்லையா!