உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் – சொல்

205

பல்லால் பிடித்தலே ‘பற்றாய்' இருந்து பின்னே, இறுக்கிப் பிடிப்பவை எல்லாம் பற்றாய்ப் பொருள் விரிவாயிற்று.

அடுகலத்தில் (சமையற் கலத்தில்) ஒட்டிக்கிடக்கும் பிடிப்புக்கும் 'பற்று' என்பது பெயர். அது வெப்பத்தால் வண்ணம் மாறிக் கருநிறமாய் இருத்தலால் கரிப்பற்று என்றும் கருப்பற்று என்றும் (பற்று, பத்தாக) வழங்குகின்றது. வளமிக்க வாழ்வினர் ‘பற்றுத்தேய்ப்புக்’ கென வேலையாள் வைத்திருத்தல் நடைமுறை. பற்று, கையால் தேய்த்து அகற்ற இயலாமல் இறுகிக் கிடத்தலால் அதனைச் 'சுரண்டி' எடுக்கத்தகடும் சிப்பியும் உண்டு, அத் தகடும் சிப்பியும் 'பற்றகற்றி' என வழங்கப்படும். ‘சுரண்டி’ என்பதும் அதற்கொரு பெயர் அதனின் வேறுபடுத்து தற்காகக், களைவெட்டும் கருவியைக் ‘களைசுரண்டி' என்பர். பற்றிக் கிடக்கும் களையைச் சுரண்டி எடுப்பதுதானே களை சுரண்டி. ‘பற்றை' என்பது களைகளுக்கும் சிறு தூறுகளுக்கும் பெயர் என்பதும் எண்ணத்தக்கது. நீர் கட்டிக் கிடத்தலால் உண்டாகும் வழுக்கல் பாசிக்குப் ‘பற்று' என்னும் பெயருண்மையும் கருதலாம்.

தலைவலி, பல்வலி முதலிய வலிகளுக்கும் அடிபட்ட வீக்கம் அதைப்பு முதலியவற்றுக்கும் ‘பற்றுப்போடுதல்' பண்டுவ முறை. பச்சிலை முதலியவற்றை அரைத்து அப்பி வைத்தலைப் ‘பற்றுப் போடுதல்' என்பது சரிதானே! “பாய்ச்சல் காட்டுறியே என்ன? பற்றுப் போடணுமா!" என்பது வழங்கு மொழி.

குளம், கிணறு, கால்வாய், ஆறு முதலிய நீர்நிலைகளை அடுத்திருக்கும் நிலம் வளமிக்கது; வாளிப்பாகப் பயிரை வளர்த்து வளம் செய்வது இவற்றைப் பற்றிய நிலம், பற்று என வழங்கப்பெறும். முறையே குளத்துப்பற்று, கிணற்றுப் பற்று, கால்வாய்ப் பற்று. ஆற்றுப்பற்று என்று சொல்லப்படும். 'பற்று’ என்பதே ‘நன்செய்’ “நீரருகே சேர்ந்த நிலம்” என்பர். "நிலத்துக்கு ணியென்ப நெல்லும் கரும்பும்" என்பர்; நிலம் என்பதே நன்செய்யைக் குறிக்கும் என்பதை 'நன்செய் புன்செய்' என்பவற்றைச் சுட்டும். ‘நிலபுலம்' என்னும் இணைமொழியால் சுட்டும்.நிலபுலம்' இனிதுணரலாம்.

நன்செய் நிலத்திற்கு அல்லது மருதநிலத்திற்கு உரிய 'பற்று' என்னும் பெயர். அந்நிலத்து அமைந்த ஊர்க்கும் பெயராக வழங்கலாயிற்று, ‘பற்று' என்பது வீடுகள் நெருங்க