உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

இளங்குமரனார் தமிழ்வளம் 15

நெருங்க அமைந்த மருதநிலச் சிற்றூராம். ‘பற்று' என்பது ‘பத்து' என்றும் ‘பட்டு' என்றும் பின்னே திரிந்து வழங்கலாயிற்று.

பற்று',

மதுரையை அடுத்த ‘அச்சன்பற்று’, ‘அச்சம்பத்’தாகவும் பிராட்டிபற்று’, ‘பிராட்டிப்பத்தாகவும் வழங்குதல் ‘பத்து’ ஆயதற்குச் சான்று; 'செங் கழுநீர்ப்பற்று', ‘செங் கழுநீர்ப்பட்'டாய் மாறிச் 'செங்கற்பட்'டாய்ச் சிதைந்தது. 'பற்று' ஆயதற்குச் சான்று.

சித்தூர் நாட்டுப் பூத்தலைப் பற்றும், ஆர்க்காட்டுத் தெள்ளாற்றுப் பற்றும் முறையே பூதலப்பட்டாகவும் தெள் ளாரப்பட்டாகவும் மருவி வழங்குவதைத், ‘தமிழகம்’ ஊரும் பேரும்" சான்றுடன் உரைக்கும் (பக் 26, 27).

அரத்த (இரத்த)த் தொடர்புடை குடிவழியினரை 'ஒட்டுப் பற்று' என்பதும், அத்தொடர்புடைய கூட்டத்தைப் ‘பற்றாயம்’ என்பதும் அத்தகு வாய்ப்பில்லானை ஒட்டுப் பற்று இல்லாத வன்' என்பதும் நாடறிந்த செய்தி.

அன்பு கொண்டு ஆரத் தழுவி நட்புற்று இருப்பாரைப் ‘பற்றாளர்' என்பதும் அத்தகையர் இல்லாரைப் ‘பற்றிலி’ என்பதும், பகைவரைப் ‘பற்றார்’, ‘பற்றலர்' என்பதும் இலக்கிய வழக்குகள். முன்னதொன்றும் உலகியல் பெருவழக்கமாம். மதிலை முற்றிவிடாது இருத்தலைப் ‘பற்றாற்றல்; என்பது புறப்பொருள் இலக்கணக் குறியாம்.

கோல் காலாகக் கொள்வார்க்கு உதவும் ஊன்றுகோல், 'பற்றுக்கோல்' எனப்படும். கொல்லுலைக் களத்தில் பற்றி எடுக்க உதவும் கருவி, ‘பற்றிரும்பு’, ‘பற்றுக்குறடு', பற்றுக் கோல்' என வழங்கும். இரண்டு இரும்புத்துண்டங்களை ஒன்றாய் இணைத் தற்கு அவற்றின் இடையே ஒரு சிறு துண்டு இரும்பு வைத்துப் பொடி தூவித் தட்டி இணைப்பது வழக்கம். அதற்குப் ‘பற்றாசு’ என்பது தொழில் முறைப் பெயர். 'ஆசிடை எதுகை’யைப் 'பாற்றாசு' என்பதை எடுத்துக்காட்டி விளக்குவது இலக்கண நூன்முறை.

'பற்றிரும்பு' என்பது ‘அள்ளு' என்னும் பொருளையும் தரும். அள்ளாவது கதவை மூடிச் சாத்துதற்கு உதவும் கம்பியை யும் தாழ்ப்பாளையும் மாட்டி வைக்கும் கொண்டியாம். பிறி தோரிடத்து இணைப்பைத் தன்னிடத்துக்கொண்டிருப்பதால் 'கொண்டி’யாயிற்று. பகைவர் நாட்டைக் கொள்ளையிட்டுக் கொண்டு வருதலைக் 'கொண்டி 'கொண்டி' என்றதும், அந்நாட்டில்