உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - சொல்

207

இருந்து கொண்டு வந்த மகளிரைக் 'கொண்டி' காண்டி’ மகளிர்’ என்றதும் கருதத் தக்கன.

L

படர் கொடிகள் பற்றிச் செல்லுதற்கு இயற்கை உதவிய கால்கள் சுருள் சிப்புகளாம். அவை மரம், செடி, பந்தர், முதலியவற்றைப் பற்றிக்கொண்டிருப்பதால் 'பற்றுக் கோடுகளாக மரம் முதலியவை விளங்குகின்றன. அக் கொடிகளுக்கு அமைந்த கொழு கொம்பு போலக், கொடியிடை மெல்லியல் நல்லார்க்குக் கொழுநர் பற்றுக் கோடாக விளங்குதலைப் பலரும் கூறுவர். ஒத்த உரிமைக்கு இவ்வுவமை பொருந்தாது என உரிமைப் பெண் உரத்து மொழிந்தாலும் மொழிதல் தக்கதே!

சொல்லாட்சியைச் சுட்டல் முறைமை அல்லவோ!

ஆயின்

“தீப் பற்ற வைத்தல்’ நல் வழியிலும் உண்டு! அல்வழியிலும் உண்டு! 'இது பற்றாது' ‘அது பற்றாது' என்பதோ வண்டமிழ் நாட்டின் வைப்பு நிதி! வையகம் அறிந்த வளநிதி! பற்றாக் குறைத்’ திட்டத்தை வகுத்து வகுத்துப் பண்பட்டுப்போன நம்மவர் வீட்டு நிலையையும் நாட்டு நிலையையும் நானிலம் நாளும் நன்கு அறிந்து கொண்டு தானே உள்ளது!

ஈயம் பூசப்படாத பித்தளைக் கலம் களிம்பேறி உணவைக் கெடுத்தலையும், அஃதுண்ட உடலைக் கெடுத்தலையும் அறிந்ததே. அதனால் அல்லவோ, ‘ஈயப் பற்று' வைப்பார் தெருத்தோறும் கூவிக் கூவி வருகின்றனர்.

கம்பு கட்டும் கயிற்றை முற்காலத்தவர் ‘பற்றாக்கை என்றனர். இக்காலத்தார் கூரையை வரிச்சுடன் இறுக்கிக் கட்டுதற்கு உதவும் புளிய வளார், கருவேல் வளார், கற்றாழை நார் முதலியவற்றைப் “பற்றாக்கை' என்பர். ‘பற்று ஆக்கை’ என்பதே அது. ஆக்கை, யாக்கை, யாப்பு முதலியவை ஆர்த்தலாகிய கட்டுதல் வழியாக வந்தவை. எலும்பு, நரம்பு, தோல் முதலியவை இணைத்துக் கட்டப் பெற்ற யாக்கையையும், எழுத்து அசை, சீர்முதலியவற்றால் கட்டப்பெற்ற யாப்பு வகைகளையும் கருதுக.

தேடி வைத்த பொருளை எளிதில் விட்டுவிட எவரும் இசைவரோ? உடை அவிழ அல்லது நெகிழவிடாது போற்றுவது போல் போற்றுதலால்தானே 'உடைமை' டமை' என்று என்று சொல்லப் படுகிறது. உடையாந் தன்மையுடையது உடமை யாம்! அவ் வுடைமையாம் செல்வத்திற்கு ஒரு பெயர் 'பற்று' என்பது! பற்றிக்கொண்டு விடுதற்கு அருமையுடையது ஆகிய அப் பற்றையும், நற்குடிப் பிறந்தார் தம் இயற்கைப் பெரு நலத்தால்