உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

இளங்குமரனார் தமிழ்வளம்

15

பொருட்டாக எண்ணார் என்பதைச் சுட்டுவார் திருவள்ளுவர். ‘பற்றற்ற கண்ணும் பழமை பாராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள' என்பது அது.

தேடித் தேடித் தேர்ந்து கொள்ளவேண்டிய அறிவைப் ‘பற்று’ என்று கூறும் பரிபாடல். அறிவறியாளைப் ‘பற்றாள்’ என்னும் அது.

ஒன்றைப் 'பற்றி' ஆராய்தலும்,

ஒருவரைப்

பற்றிப் பேசுதலும், ஒருவழியைப் 'பற்றி' நடத்தலும் 'பற்றி' எவரே அறியார்? “சிற்றில் நற்றூண் பற்றி' நின்ற காவற்பெண்டைப்பற்றிப், புறப்பாடல் மொழிகின்றது என்றால்' நாம் எதை எதைப் பற்றியெல்லாம், எவரெவரைப் பற்றி யெல்லாம் நிற்கிறோம்! சிங்கள அரசும் படையும் காவல் துறையும் வெறியரும் தமிழர் வீடெல்லாம் கூடெல்லாம் பற்றி எரித்தாலும் அதனை அறிந்த உணர்வுடையார் நெஞ்சமெல்லாம் நெஞ்சமெல்லாம் பற்றி யெரிந்தாலும் கொஞ்சமும் அதனைப் பற்றிக் கவலைப்படாத மரத்துப்போன மாந்தரும் உள்ளனரே!

'பற்றி' எரிய வைப்பதும் ‘பற்று’ என்பதுதானே வெறியர் முடிவு! இந் நாட்டின் மேலும் இந் நாட்டு மொழியின் மேலும் இந்நாட்டு மக்கள் மேலும் கொள்ளும் பற்றினை வெறியாட்டம் என்று சொல்லும் தந்நல வெறியாளர் இங்கேயே இல்லையா? அவர்கள் பற்றுமைப் பசப்பு "நும்மது நம்மது நம்மது ஏஏ” என்று ஊற்றைப் பல் காட்டும் பசப்பேயாம்!

சல்வம்

“பற்று வரவு’ திறமையாக எழுதத் தெரியாத வணிகன் சேர்த்ததுண்டா? ‘பற்றுச்சீட்டு' வாங்காமல் சொல்லும் கணக்கை முறைமன்றமோ வரியாயமோ ஏற்றுக் கொள்கின்றதா?

இத்துணைப் பற்றுகளையும் 'விடுக' என்பது எளிதோ? ‘அற்றது பற்றெனில் உற்றது வீடு' என்றார் நம்மாழ்வார். “பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு என்றார் திருவள்ளுவர். “பல்வழி” வந்த ‘பற்று' என்னும் சொல்வழியே எத்தனை எத்தனை பற்றுகள் விரிந்துள்ளன! ‘தமிழ் வளம்' தமிழனிடத்து உண்டோ இல்லையோ! ஆனால் தமிழில் கொள்ளை கொள்ளையாய் உண்டு! வெள்ள வெள்ள வரவாய் உண்டு.