உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. பிடி

முடிசார்ந்தவர் என்றால் என்ன, அவர் அடி சார்ந்தவர். என்றால் என்ன? முடிவில் ‘பிடி' சாம்பலாதல் உறுதி; அல்லது ‘பிடி' மண் தள்ளப்போதல் உறுதி!

'பிடிசோறு வழங்குதல் பேரறமாகப் பேசப்படும். அதுவும் குழவிக்குப் பிடி சோறு என்றால் எவரும் இல்லை எனச் சொல்வதே இல்லை. அதனைக் ‘குழலி பலி' எனக் கூறுதல் அறநூல் முறை. இறைவனுக்கு நீர்ப்பலி, பூப்பலி, ஊண்பலி படைத்தல் போன்ற பெருமையது குழவிக்குச் சோறுதரும் ‘குழவிபலி”! அதனைப் பொருளறியாப் புன்மையரும் கொலைவெறியராம் கொடியரும் குழவிப் பலி' யாக்கிக், காக்கவேண்டும் குழந்தையையே காவு கொடுத்தனர்! அவர்கள் ‘கயமை’ அது!

‘பிடி' என்பது ‘பிடித்து அள்ளும் அளவைக் குறித்தது. இது, விளக்கமாகக் ‘கைப்பிடி' எனவும் படும். ஒரு பிடி மண்ணை அள்ளிக் “கற்றது கைம்மண் அளவு; கல்லாதது உலகளவு எனக்காட்டிய ஔவையார் பாட்டு தனிப் பாட்டில் உண்டு. கையைக் கூட்டிப்பிடித்து, 'இவ்வளவேனும் அன்னம் இட்டுண் மின்” என்று கூறிய பாட்டும்' அவர் தனிப்பாட்டில் ஒன்றே!

“தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும்

என்னும் குறளில் வரும் 'பிடித்து' என்பது பிடியளவைக் குறிப்ப தாம்.

இங்குச் சுட்டப்பெற்ற பிடி, முகத்தல் அளவு.

உழவர் தம் மாடுகளைப் 'பிடி' என்னும் அளவால் அள டுக் கூறுதல் வழக்கம். நால்விரல் மடித்துப் பெருவிரல் அல்லது கட்டைவிரல் ஒன்று நிமிர்த்திய உயரம், பிடியாம்; விரல்கொண்டே அடியளவு கண்டனர் என்பது 'அங்குலம்' என்பதால் விளங்கும். 'அங்குலி' என்பது விரல்! அதனை 'விரலம்' என்பார் பாவாணர்!