உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

இளங்குமரனார் தமிழ்வளம்

15

அடி என்பது என்ன? காலடி தந்த அளவே!

இது நீட்டல் அளவைப்பிடி.

66

-

கயிறு; அணி

-

'தாம்பணிகளில் (தாம்பு வரிசை; இரு முளைகளையடித்து அதில் கயிற்றைக் கட்டி; அக்கயிற்றில் வரிசையாக மாடுகளைக் கட்டுவதால் இப்பெயர் பெற்றது; இது தாவணி எனச் சிதைந்து வழங்குகின்றது) மாடு விற்பவரும் வாங்குபவரும், துண்டைப் போட்டுக் கையை மூடி மறைத்துக் கொண்டு, கைவிரல்களைப் பிடித்து விலைபேசுவது வழக்கம் பிடி என்பது ஐந்தைக்குறிக்கும்! கைக்கு ஐந்து விரல்கள் அல்லவா! அது, ஐந்நூறு, ஐயாயிரம் என்பதையும் குறிக்கும்! இத்தனை பச்சை நோட்டு, இத்தனை கடுவாய்நோட்டு என்றால் இத்தனை நூறு, இத்தனை ஆயிரம் என்பதாம். வட்டாரம் தோறும் வெவ்வேறு குறிப்புச் சொற்களைத் ‘தரகர்’ பயன் படுத்துவதுண்டு.

இஃது எண்ணல் அளவைப்பிடி.

கோழி முதலியவற்றைச் சிலர் கையால் தூக்கிப், பிடித்துப் பார்த்த அளவில் இத்தனை பலம் என்பது உண்டு. அவர்கள் தேர்ச்சி அத்தகையது. பார்வையில்லாத ஒருவர், கோழியைத் தூக்கிப் பார்த்து இருபத்திரண்டே கால் பலம் என்றால் கால் பலம், அரைப்பலம் வேறுபாடு கூட இல்லாது இருந்ததை என் இளந்தைப் பருவத்தில் பலமுறை கண்டுளேன்.

இஃது நிறுத்தல் அளவைப்பிடி.

பிடி என்னும் அளவைப்பெயர் 'பிடித்தல்' என்னும் தொழில் பெயர்க்கு மூலமாகி விரிவடைந்தது. பிடித்தல் என்பது பற்றுதல், அகப்படுத்தல் ஆகிய பொருள் தந்தது. “பிடித்தாலும் பிடித்தாய் புளியங்கொம்பைப் பிடித்தாய்” என்றுவரும் பழ மொழியில் பற்றுதல் பொருள் வந்தது. ஏறு தழுவுதல் என்பது 'மாடு பிடி' யாக அல்லது சல்லிகட்டாக அல்லது மஞ்சு விரட்டாக வந்தது. மாடுபிடிக்கும் கயிற்றுக்குப் 'பிடி கயிறு’ என்பது தானே பெயர். தாயினிடம் எடுத்துக்கொண்டு போய்ப் பாலூட்டு குட்டி, 'பிடிகுட்டி' எனப்படுகிறது. அதற்கு மடுவையும் பிடித்து ஊட்ட வேண்டும்! மீன் பிடிக்குமாறு நீர்வற்றிய குளம் ‘பிடிகுளம்' என வழங்கப்படுகிறது. 'பிள்ளை பிடித்தல்’ அச்சம், பெற்றோர்க்கு என்றும் உண்டு போலும்! "பேய்பிடித்திடு தூதரே" என்பது என்பது வெங்கைக் கலம்பகத்தில் மறம் பாடல்! தூதரே” ‘பேய்பிடித்து ஆட்டம் போடுதலும் உடுக்கடித்து