உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - சொல்

211

ட்டலும் நாட்டில் முற்றாக ஒழிந்துவிடவில்லை! ‘பாம்பு பிடித்தல் வருவாய்த் தொழிலாக நிகழ்கிறதே!

முதற்கலப்பை உழவு, அடிசால்; அடுத்து வரும் கலப்பை உழவு 'பிடிசால்'! நீர்க்கசிவுடைய நிலம் நீர்ப்படி'! சிலம் பாட்டத்திலும் மல்லாட்டத்திலும் ‘பிடி'யின் ஆட்சியே ஆட்சி! உடும்புப்பிடியும் குரங்குப்பிடியும் ஊரறிந்த செய்திகள். அடி பிடி' சண்டை

சண்டை இல்லாத இடம் உண்டா? ‘எடுபிடி' ஆள் இல்லாத இடம் உண்டா? இடுப்புப் 'பிடித்துக் கொண்டது என்றோ, தடுமம் 'பிடித்து' விட்டது என்றோ சொல்லாதவர் உளரா! வேது 'பிடித்தல்' சித்தமருத்துவத்தில் ஒரு முறை யில்லையா? ஈரவிறகில் தீப்பிடிக்கவில்லை எனக் கவலை ஒரு பக்கம்; தீப்பிடித்தால் அணைத்தற்குத் துறை ஒருபக்கம்.

மண்வெட்டி, கோடரி, அரிவாள், அறுவாள் முதலிய வற்றைப் ‘பிடி' இல்லாமல் பயன்படுத்த முடியாதே! பிடித்துக் கொட்டுவது கொட்டுப்பிடி' எனப்பட்டு இக்காலத்தில் 'கொட்டாப்புளி'யாகச் சொல்லப்படவில்லையா? தூக்கு, செம்பு, கெண்டி முதலியவற்றுக்குப் ‘பிடி' இல்லாமல் எடுப்பது வாய்ப்பாக இராதே! ‘கைபிடிச் சுவர் இல்லாத இடம், ஒரு வேளை இல்லாவிட்டாலும் ஒரு வேளை இடர் செய்துவிடும்! கைபிடித்துத் தருவதுதானே மணவிழாவின் நிறைவுச் சடங்கு! ஓடிப்பிடித்தலும் ஒளிந்து பிடித்தலும் விளையாட்டு அல்லவோ! பிடிப்பாகச் சட்டை இருத்தல் வேண்டும் என்பதிலே ஆர்வந்தான் பலர்க்கும் எவ்வளவு! பிடித்தாவது குற்றக் கூண்டில் நிறுத்துதல் இந்நாட்டில் வியப்பில்லையே!

இந்தப் பிடிப்பு இன்னும் வளர்ந்து, ‘பிடிமானம்' சிக்கனம் ஆயிற்றே! ‘பிடிபணம்’ அல்லது ‘பிடிபாடு' என்பது கழிவு (கமிசன்) ஆயிற்றே! பொறுக்கப் ‘பிடித்தல்' என்பது வயிறு முட்ட உண்ணல் ஆயிற்றே! சீட்டுப் பிடித்தல் சிறு தொழிலில் தலைத்தொழில் ஆகவல்லவோ நடக்கிறது! ‘புகைபிடியாதீர்’ என்னும் பலகைக்குக் கீழே இருந்து கொண்டே புகை பிடித்தல் நம் நாட்டு ‘ஒழுக்கம்’ ஆயிற்றே!

அறிவில் படாமை, புலப்படாமை, தெளிவில்லாமை இவற்றைப் 'பிடி படவில்லை' என்பது விளக்குதல் கண்கூடு. கண்டு பிடிக்க முடியவில்லையே என்னும் கைவிரிப்பு ஒவ்வொருவர் வாழ்விலும் இல்லையா! ல்லையா! உங்களுக்கு இது பிடிக்குமா? ‘பிடிக்காதா?” என விருந்தில் கேட்பது இயல்பில்லையா!

து