உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

இளங்குமரனார் தமிழ்வளம்

15

இந்தப் பை 'பிடிக்காது'; இந்தப் பை 'பிடிக்கும்' எனக் கொள்மானம் ஆயிற்றே பிடி! இந்தப் பிடி இன்னும் எங்கே தாவுகின்றது? எண்ணத்திற்கு அல்லது மனத்திற்குத் தாவுகின்றதே!

'மனப்பிடித்தம் தானே, மணப்பிடித்தம், மற்றைப் பிடித்தம் எல்லாமே என்ன ஐயா” என்பது இந்த மாப்பிள்ளைக் கொடை (வரதட்சணை) அறமாகிவிட்ட நாளிலும் அங்கொருவரும் இங்கொருவரும் பேசும் செய்தியாயிற்றே! பிடித்தவர் நண்பர்; பிடியாதவர் பகைவர்; இல்லையா!

இன்னும் பிடிவளர்கின்றதே! ஆணின் அன்புப் பிடியிலும் அரவணைப்புப் பிடியிலும் சிக்கிய பெட்டைக்குப்‘பிடி' என்பது பெயர் அல்லவோ! "பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிற்றை’ப் பேசுகின்றதே கலித்தொகை! ஏறும் இன்ப ஓசையால் ஏறும் ஏற்றின் (களிற்றின்) பிடிக்குள் அகப்படுவதும், பின்னே அவ் வின்ப மயக்குத் தீரப் பிடித்துத் தூக்கி விடப்படுவதும் ஆகிய 'பிடி'யின் பெயரே பின்னே பெண்மைப் பொதுப் பெயராய்ப் பொலிவாயிற்றே!

பிடியில்லாதது வாழ்வாகுமா? பிடிப்பு இல்லாமலும் வாழ்வாகுமா? பிடிப்பு இல்லாத ஒட்டுச்சுவர் வீழ்வதைக் கேட்க வேண்டுவது இல்லையே! ஆதலால், வாழ்வுக்கு வேண்டும் பிடிப்பின் மூலவைப்பகம் பெண்ணே என்பதைத் தெளிந்தே கையுடைய களிற்றிற்கு மட்டும் பிடியைச் சொல்லி நிறுத்தாமல் மற்றவற்றுக்கும் ‘பிடி'யை வைத்தார் தொல்காப்பியனார். 'விடுமின் விடுமின்' என்று காதலனைக் காதலி சொன்னால், 'பிடிமின் பிடிமின் என்பது பொருள் எனக் கலிங்கத்துப்பரணி கூறும். மனைவி இயல்நுட்பம் 'பிடி' என்னும் பெண்பால் பெயர் சொல்வதாம்!

பிடிமுதல் நீண்டு ‘பீடி’ ஆகிவிட்டதா? பிடித்தல் என்பது பீடித்தல் பொருள் தருவது அன்றோ! நோயும் பிணியும் பீடித்தலாகச் சொல்லும் வழக்கு ஊன்றிவிட்டதே! அதன் வழியே ‘பீடை'யும் பற்றிக் கொண்டுள்ளதோ!

வவ

ஒருபிடி படியும் சீறிடம் எழுகளிறு புரக்கும்' எனக் கூறும் வயல் வளம் வாய்த்தால், அயல்வளம் எல்லாம் தேடிவருதல் உறுதியேயல்லவோ!