உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. புலவர் இறையனார்

"கொங்குதேர் வாழ்க்கை' என்பதொரு பாட்டு எவரும் கேட்டது. அது குறுந்தொகைப்பாட்டு என்பதால் அறியப் பட்ட அளவினும் 'தருமி கதைக்கு மூலமான பாட்டு' என்னும் திரு விளையாடல் திரைப்படத்தால் தெரு விளையாட்டாளரும் தெரிந்து கொண்ட பாட்டாயிற்று.

கொங்குதேர் வாழ்க்கைப் பாடலைப் பாடியவர் பெயர் இறையனார்' என்பதே! அவர் 'இறைவ'னா ராக எப்படி ஆனார்? ‘இறையனார்’, 'இறைவனார்’ என்னும் பெயர்களில் உள்ள வேறுபாட்டை அறியாதவர் இணைத்த இணைப்பாக இஃது இருக்கவேண்டும். அல்லது வேண்டுமென்றே இறைமைப் படுத்த எண்ணியவர் முனைப்பாக இருக்கவேண்டும். இவற்றுள் பின்னதே கொள்ளத் தக்கதாம். ஏனெனில் இவ்விணைப்பைப் படைத்தவர்கள் புலமை இல்லார் அல்லரே! அறிவுப் புலத்தில் தலைப்பட்டவர் என்னத் தக்கவர் ஆவரே.

இறையனார் பெயர், கொங்குதேர் வாழ்க்கைப் பாடலுக்கு மட்டும் தானா இறைவனாருடன் திரிக்கப்பட்டது! இல்லை! றையனார் அகப்பொருள் என்றும், இறையனார் களவியல் என்றும் வழங்கப்பட்டு வரும் நூலுக்கும் இறைவனோடு தொடர்பு உண்டாக்கி அதற்கேற்பப் புனைவுகளும் புகுத்தி வைக்கப்பட்டன! இறையனை றைவனாக எத்துணைப் புனைந்தும் பெயர்கள் மட்டும் இறையனாகவே நின்று விட்டமையே ‘மெய்ந்நிலை' காட்ட வாய்ப்பாயிற்றாம்.

இறையன் என்பதும் இறைவன் என்பதும் ஒரு பொருள் தரும் சொற்களா? எங்கேனும் இறையனை, இறைவன் என்றும், இறைவனை, இறையன் என்றும் போலி முறையாக வேனும் காண்பது உண்டா? இல்லாமலும், 'கட்டும்' ‘ஒட்டும்' இது 'கட்டும்ஒட்டும் காறும் விட்ட பாடில்லையே!

குறுந்தொகை முதற்பதிப்பு, சௌரிப்பெருமான் அரங்க னார் பதிப்பு. அது 1915இல் வெளிப்பட்டது. 'கொங்குதேர்