உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம்

சொல்

217

வாழ்க்கை' எனத் தொடங்கும் பாடலின் தலைப்பில் ‘இறையனார் பாடியது' எனப் பொறித்துள்ளார். பாடினோர் பெயர்ப் பட்டியலில் ‘இறையனார்' எனப் பெயரிட்டதுடன், அடைப்புக் குறிக்குள் கூடன் மேவிய ஆடன் மேவினார்’ எனவும் பதித்தார். மேலும், அதில், 'இப்பாட்டு இறையனார் தருமிக்கு இயற்றித் தந்தது; இறையனார் ஆலவாயடிகள்' என்று விளக்கமும், திருவிளையாடல் கதையும் செறிக்கப்பட்டன.

பாடலிலோ, அதன் திணை திணை துறையமைப்புகளிலோ திருவிளையாடல் செய்திக்கு இடமுண்டா?

இது, இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த வழித் தலைமகளை இயற்கைப் புணர்ச்சிக்கண் இடையீடு பட்டு நின்ற தலைமகன் நாணின் நீக்குதற்பொருட்டு மெய்தொட்டுப் பயிறல் முதலாயின அவண்மாட்டு நிகழ்த்திப் பாடுமாற்றாற் கூடிய தனது அன்பு தோற்ற நலம் பாராட்டல்' என்பது பாடல் துறைக்குறிப்பு. இக்குறிப்பு பழம்புலவர் ஒருவரால் குறிக்கப்பட்டது. பாடலுக்கு உரிய உரை விளக்கம் காண்பதற்கு ஒளிச் சுடராக இருப்பது இது. இதில், தருமி இல்லை! இறைவனும் இல்லை! இயற்கைப் புணர்ச்சியும், தலைவனும் நலம் பாராட்டலுமே உள!

இவ்வாறாகப் பழமரபில் வழுவி உரை வளர்த்துப்போக நேர்வானேன் என ஐயம் கிளைத்தல் இயற்கை!

"நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி, நற்கனகக் கிழி தருமிக் கருளினோன்காண்” என்பது அப்பரடிகள் வாக்கு! அதனைக் கொண்டும் பிற புனைவுகளைக் கொண்டும் திரு விளையாடலில் தருமிக்குப் பொற்கிழியளித்த திருவிளையாடல் கிளர்ந்தது. இப் பின்னை நூல்கள் பின்னுவதை முன்னை நூலில் முடிபோட்டு விட்டனர்! அதற்கு வாய்ப்பாக இருந்தது பெயரிலமைந்த ரெழுத்தல்லாப் பிறவெழுத்துகளின்

பொருத்தம்!

அரங்கனார் பதிப்பில் மட்டும் தானா இக்கதை யிணைப்பு? 1937 இல் வெளிப்பட்ட முனைவர் உ. வே. சாமிநாதர் பதிப்பு, 1946 இல் வெளிப்பட்ட பெரும் பேராசிரியர் இரா. இராகவர் பதிப்பு, 1985 இல் வெளிப்பட்ட தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகப் பதிப்பு ஆகிய எல்லாவற்றிலும் இறையனார் பெயர் உண்டு. இறைவனார் திருவிளையாடலும் உண்டு!

அகப்பாட்டுக்குச் சில தனி ஒழுங்குகள் உண்டு. அவற்றுள் தலையாய ஒன்று.