உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

இளங்குமரனார் தமிழ்வளம்

மக்கள் நுதலிய அகனைந் திணையும் சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர்

15

என்பது (தொல். அகத் 54)

அகப்பாடலில் ‘தலைவன்’ ‘தலைவி' எனப்பெயர் ஆளப் படுதல் அன்றி, அவர் பெயர், இன்னதென ஆளப்பெறுதல் வழக்கில்லையாம். இந்நுட்பமும் நாகரிகமும் பண்பாடும் வியந்து வியந்து போற்றத்தக்க விழுப்பமுடையதாம். இவ்வாறாகலின், குறிப்பாக விருப்பமுடையதாய். இவ்வாறாகலின், குறிப்பாகத் தலைவன் தலைவியர் பெயர் உரைத்தலும், சார்த்தியுரைத்தலும் ஆகிய முறைகளை அறவே கடிந்து அறமுறை நிலைபெறுத்தி வந்தனர். இப்பெயர்ச்சுட்டு நூற்பாவும், இதன் தொடர்பான ஆய்வுகளும் மிக விரிவுடையவாகலின் இவ்வளவில் அமைவாம்.

'கொங்குதேர் வாழ்க்கை' எனத் தொடங்கும் குறுந் தொகைப் பாடல் குறிஞ்சித்திணை சார்ந்தது; நலம் புனைந் துரைத்தல் துறையது; ஆக, அகனைந்திணையில் தலைப்பட்ட பாடலில் குறிப்பாகவேனும் பாண்டியனும், அவன் தன் துணை பற்றிய கூந்த லாய்வும் இடம் பெறுத்த எண்ணார். இடம் பெறுத்த எண்ணின், குறுந்தொகை நானூற்றில் ஒன்றாக எண்ணவும் எண்ணார்! ஆகலின் பின்னைப் புனைவை முன்னை நூலுக்கு ஏற்றியுரைத்தல் முறை கேடாம்.

சங்கச் சான்றோருள் ஒருவர் ‘நல்லிறையனார் என்பார். அவர் பாடிய பாடல் புறம் 393. அவர் பெயரை ‘நல்லிறைவனாகக்’ காட்டாமல் அப்படியே அமைய எப்படியோ விட்டு விட்டமை, இவ்வாய்வுக்கு இனிய வாய்ப்பாயிற்று. அவர் பாடிய பாட்டுக்கு ஏற்பப் புனைகதை ஒன்று புகாமையும் 'நல்' என்னும் அடையொன்று முன்னின்று தடையொன்று செய்தமையும், அப்பாடல் பாடாண்தினைக் கடைநிலைப் புறப்பாடலாய்ச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனைப் பாடியது ஆகலானும் திரிப்புக்கு இடமின்றி உய்ந்ததாம்.

குறுந்தொகை 394 ஆம் பாடலை இயற்றியவர் குறி யிறையார் எனப்படுகிறார். அவர் தம் பாட்டில் இளஞ்சிறார் களைக் குறிக்குங்கால் ‘குறியிறைப் புதல்வர்' என்கிறார். இத் தொடரில் நயமுணர்ந்த சான்றோர், பெயரறிவாரா அப்புலவர் தமக்கொரு ‘பெயர் சூட்டுவிழா’ நிகழ்த்தி நிலை பெறுத்தினார்! குறியிறையா ராகவே இன்றும் காட்சி வழங்குகின்றார்.