உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் – சொல்

219

இனி, இறையன் இறைவன் என்னும் பெயர்களைக் கருதுவோம்.

'இறைவன்' என்னும் சொல் தொல்காப்பியத்தில், அரசன் என்னும் பொருளிலேயே ஆளப்பட்டுள்ளது. இறைவன் வீழ்ந்தென' (தொல். புறத். 17) என்பது அது, திருக்குறளில் அச்சொல் ஈரிடங்களில் கடவுளையும் (5. 10) மூன்றிடங்களில் அரசனையும் (690, 733, 778) குறித்து வந்துளது. ஆக இறைவன் என்பது ஆளும் அரசனையும், ஆண்டவனையும் குறித்து வருவது புலப்படும். 'ஆண்டவன்' என்பது ஆண்ட (ஆட்சி செய்த) அரசனையும் ஆண்டவனையும் குறித்தல் இயல்பு நடைமுறையே! ‘ஆண்டை ஆண்டை' என்பதும் என்பதும் 'அடிமை' என்பதும் இன்றும் ஒழிந்தனவோ?

ஆண்டவனும் ஆள்பவனும் 'இறைவன்' எனப்பட்டனரே யன்றி, ‘இறையன்' எனப் பெற்றனர் அல்லர் என்பது இவற்றால் தெளிவாம். இனி 'இறையவன்' 'இறையோன்' எனச் சங்க நூல் சார்ந்த சிலம்பு மேகலைகளில் இடம் பெற்றுள. அவை:

66

இளம்பிறை குடிய இறையவன்

சிலம்பு. 28:87

“நுதல் விழி நாட்டத் திறையோன்”

சிலம்பு. 9:30

66

இறையோன் கூறும்

சிலம்பு. 15:162

66

இறையோன் கேட்டு”

சிலம்பு. 27:142

66

"இறையோன் செவ்வி”

சிலம்பு. 27:148

66

இறையோன் செவி”

சிலம்பு. 28:188

66

'நுதல்விழி நாட்டத் திறையோன்”

மணிமே. :54

என்பன.

துணையன் துணைவன்' என்பவற்றில் ‘யகர வகர’ வேறுபாடு மட்டும் தானே! ஆனால் எவனும் ஒருவர்க்குத் துணையன் ஆகலாம்! ஆனாலும் எவனும் ஒருவர்க்குத் துணைவனாக முடியுமா?

து

இவ்வாறே

துறையன்

துறைவன்

நிறையன்

நிறைவன்