உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

தலையன்

என்பவற்றையும்,

இளங்குமரனார் தமிழ்வளம் 15

தலைவன்

கணயன்

கணவன்

கலயன்

கலவன்

புலயன்

புலவன்

என்பவற்றையும் எண்ணின் எத்தகு பொருள் வேறுபாடு? ஓர் எழுத்துத் திரிபு வருதலே பொருள் திரிபு குறிப்பதற்காகத்தானே! இறையனுக்கும் இறைவனுக்கும் உள்ள பெயர்ப்பொருள் வேறுபாடு என்ன?

இறையன் என்பது, இயற்பெயர்

இறைவன் என்பது, பொறுப்பால் அல்லது நிலையால் அமைந்த பெயர்.

இறையன் என்பது சிறப்புப்பெயர்; அதாவது ஒருவருக்கே உரிய பெயர்.

இறைவன் என்பது, பொதுப்பெயர்: அதாவது அரசராவார் எவர்க்கும், ஆண்டவராகக் கருதப்படுவார் எவர்க்கும், உரிய பொதுப்பெயர்.

இறையன் என்பது, தனித்து நின்று இன்னார் எனத் தெரிவிக்கும் பெயர். இறைவன் என்பது, முன்னடை பின்னடை செய்தி ஆகியவை கொண்டு இன்னார் எனத் தெரிவிக்கும்

பயர்.

இறையன் என்பது பெயர் வழிப்பட்டபெயர்; இறைவன் என்பது வினைவழிப்பட்ட பெயர்.

இறை தண்டுவான் எவனும் இறைவனே!

இறை கூர்தல் (எங்கும் தங்குதல்) உடையான் எவனும் இறைவனே!

இப்பொதுக் கரணியம் கருதாத தனித்தன்மை கருதிய கரணிப்பெயர் இறையனாம்.

ஆயின் ‘இறையன்' என்னும் பெயர்க்குப் பொருள் என்ன என்னும் வினா எழுதல். இயற்கையாம். இறை என்பது ‘உயர்வு என்னும் தன்மைப் பொருளது.