உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம்

சொல்

223

பெருமகன் ‘பெருமான்' ஆய அளவில் திரிபு நிற்கவில்லை. அது 'பெம்மான்' என்றும் திரிந்தது. மக்களுக்கு அமைந்த பெருமகன் இறைவனுக்கும் ஆகித் திரிபுகளையும் கொண்டது. ‘பிரமாபுரம் மேனிய பெம்மான் இவனன்றே" என்பது தேவாரம்.

பெரும் மகன்’ பெருமான் பெம்மான் ஆகிய அளவிலேனும் நின்றதா? இல்லை. மேலும் திரிந்தது. ‘பிரான்’ கியது. சிவபெருமான் 'சிவபிரான்' எனப்படுவது இல்லையா? 'பிரான்' பெருமான் போலவே பெருவழக்காயிற்று' 'தம்பிரான்' 'நம்பிரான்' ‘எம்பிரான்' என உரிமையடை பெய்தும் சொல்லப் படுவதாயிற்று.

66

இவரலா திலரோ பிரானார்?” எனத் தம்பிரான் தோழர் நம்பிரான் சுந்தரரால் அசதியாடிச் சொல்லவும் பட் பட்டது! பிரானுக்குத் தகப் ‘பிராட்டி’ ‘தம்பிராட்டி' எம்பிராட்டி முதலியன வந்தன.

சொல்லின் திரிபு ஆய்வு சுவை மிக்கது மட்டுமன்று; மொழி வரலாற்றுக்கும் காலத் தெளிவுக்கும் அரிய கருவியாகவும் உதவும் என்பது அறியத்தக்கது.

மலையில் இருந்து கானாற்றில் அடித்துக்கொண்டு வரப்பட்டு, முல்லைக் காட்டில் உருண்டு புரண்டு வரும் 'கல்' எத்தகைய தேய்மானத்தை அடைகின்றது என்பதையும், அம் முறையான தேய்மானம் எத்தகைய வனப்பை உண்டாக்கி விடுகின்றது என்பதையும் அறிபவர், கால ஆறு தேய்க்கும் தேய்ப்பில் சொற்றேய் மானம் நிகழ்தலைக் கண்டு கொள்வர். அதே பொழுதில் கல்லின் வடிவு மாறினாலும் அதன் அடி மூலமும் வண்ணமும் மாறாமை போலச், சொல்லின் திரிபிலும் அதன் அடி மூலமும் பொருட்பேறும் மாறாமை கண்டு போற்றிக் கொள்வர்.