உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. பொழுது

பொழுது போகவில்லையே என்று வெதும்புவாரைப் பற்றிப் புகலவில்லை!

'பொழுது போதவில்லையே' என்று வெதும்புவாரைப் பற்றி விளம்பவில்லை!

பொழுதில் 'நல்லதும்

கொள்வாரைக் குறித்தும் கூறவில்லை!

அல்லதும்'

பகுத்துக்

பொழுதுப் பெயர்கள் தாம் தமிழில் எத்தனை! எத்தனை!

என்று எண்ணியது இப்பொழுது!

அசைப்பு – கண்ணிமைக்கும் பொழுது

அந்தி – கதிர்மறையும் பொழுது

அந்திக்கருக்கல் - கதிர்மறைந்து இருளும்பொழுது

அமையம் அமைந்த நல்லபொழுது

அரையிருள்யாமம் - நடுயாமப் பொழுது

அல் - பகல் அல்லாத இரவுப் பொழுது

அல்கல் - ஒளி சுருங்கி வரும் மாலைப் பொழுது

இமைப்பு கண்ணிமைக்கும் பொழுது

இரவு, இரா -இருட்பொழுது

இருண்மாலை இருள் கப்பி வரும் மாலைப் பொழுது

உச்சி - கதிர் உச்சியில் நிற்கும்பொழுது

உருமம் உச்சிக் கடுவெயிற்பொழுது

உவா

நிறைபொழுது: 15 நாள் கொண்ட காலப் பொழுது

எல் - கதிர் ஒளி செய்யும் பகற்பொழுது

எற்பாடு – கதிர்மறையும் பொழுது