உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

இளங்குமரனார் தமிழ்வளம் 15

முறையில் இருந்து 'பரம்பரை' ஆட்சி சொல்லப்படுகின்றது

என்க.

'உட்கார்ந்து சாப்பிட்டாலும் ஒன்பது பரம்பரைக்கு வரும்” என வழங்கும் பழமொழி ஒன்பது பரம்பரையைச் சுட்டும்.

அவை:

ஆண்பால்

1. சேயோன்

L

பெண்பால்

பழையோன்

2. ஓட்டன்

3. பூட்டன்

4. பாட்டன்

5. தந்தை

6. மகன்

7. பேரன்

ஓட்டி

பூட்டி

பாட்டி

தாய்

மகள்

8. கொள்ளுப்பேரன்

9. எள்ளுப் பேரன்

பேர்த்தி

கொள்ளுப் பேர்த்தி

எள்ளுப் பேர்த்தி

இவ்வொன்பான் தலைமுறைப் பெயர்கள் இவ்வொழுங்கில் அமையினும், இக்கால வழக்கில், மாறியும் திரிந்தும் கிடத்தல் உலகியலை நோக்க நன்கு அறியப்பெறும்.

எனப்

தாயும் தந்தையுமாம் இருவரும் பெற்றோர் படுகின்றனர். கல்வி செல்வம் வீரம் வினையாற்றல் இன்ன பலவற்றை அவர்கள் பெற்றிருந்தாலும். அவற்றைப் பெற்றவர்கள் என்பதற்காக அவர்கள் 'பெற்றோர்' எனப்படுவதில்லை. மக்களைப் ‘பெற்றதனாலேயே பெற்றோர் எனப்படுகின்றனர். மக்களைப் பெறுவதைப் 'பேறு' என்பதும், அவர்களைப் பெற்றெடுக்கும் காலத்தைப் ‘பேறு காலம்' என்பதும் கருதத் தக்கனவாம்.

“பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற

என்றார் திருவள்ளுவர்.

"பெற்றோன்' என்பது தந்தையையும், 'பெற்றோள்’ என்பது தாயையும், 'பெற்றோர்' என்பது இருவரையும் குறித்தல்