உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் சொல்

239

ஓடி ஆங்காங்குக் கிளைவேர் ஊன்றிப் பூத்துக் காய்க்கும். ஆயினும் அதன் ஒரு கொடித்தன்மை மாறாமை தெளிவாம். ஆதலால், கொடி வழி என்பதும் குடி வழி என்பதும் ஒன்றாய் அமைந்தன. மாந்தர் அனைவரும் ஒரு குலம்; அவருள் தமிழராவோர் ஓர் இனம்; அவருள் சேரர் சோழர் பாண்டியர் வேளிர் பல்லவர் கங்கர் எனப்பட்டோர் தனித்தனிக்குடியினர். சோழர் இருவர் போரில் எதிர்த்து நின்றபோது குடிப்பொருள் அன்று நும்செய்தி' என்று கூறும் புலவர் வாக்கும், 'பழங்குடி என்பதற்குப் பரிமேலழகர் கூறும் உரை விளக்கமும் ‘குடி' என்பதை நன்கு விளக்கும். 'குலம் வேறு குடிவேறு' என்பதும் விளங்கும். குலம் பெரும் பிரிவுக்கும், குடி அதன் உட்பிரிவுக்கும் உரியது என்பதும் தெளிவாம். இதனைக் ‘குலமும் ஒன்றே குடியும் ஒன்றே' எனவரும் கபிலர் அகவல் தெளிவிக்கும். இடை காலத்தே குடிப்பெருமையைக் குலப் பெருமையாகச் சுட்டினர். குலமுறை கிளத்து படலங்களும் வகுத்துப் பாடினர். நிற்க.

க்

மரபு, கொடிவழி, குடிவழி, வழிவழி, வழிமுறை, தலை முறை, பரம்பரை என்பனவெல்லாம் ஒரு பொருளனவாய் வழங்குவன. இவற்றுள் பரம்பரை என்னும் ஆட்சி பிற்காலத்த தாம். ஆனால். அதன் பொருளமைதி முற்பட்டதாம். 'பரம்’ என்பது இறைவன்; ‘பரை' என்பது இறைவி; இறைவன் இறைவி முதலாக வருவது ‘பரம்பரை' என்பதாம். இக்காலத்துப் பலப்பல குடியினரும் தங்கள் குடி முதல்வனைத் தெய்வநிலைக்கு ஏற்றிச் சொல்லுதல் அறியத்தக்கதாம் முன்பும் சேரர் செந்தீயையும், சோழர் செங்கதிரையும், பாண்டியர் வெண்டிங்களையும் தங்கள் குலமுதலாகக் கொண்டமையும் கருதத்தக்கதாம். அம் முறையில் முதுபழந்தலைவனும், முதுபழந்தலைவியும், சேயோன் என்றும் பழையோள் என்றும் சுட்டப்பெற்றனர். சேயோன் என்னும் முதுவன்பெயரே சிய்யான் என இந்நாளில் வழங்கு கின்றதாம். சோயோன் என்னும் தொல்பழமுதியன் பெயர், செந்நிறங் கரணியத்தால் தன்மைப் பெயராயும் வழங்கிற்றாம். சிவன் என்பதும் அரன் என்பதும் செந்தீவண்ணன், சிவந்தவன் என்னும் பொருளவேயாம். அவன் மனைவியாம் முதுமகள் பழையோள் என்று முந்து நூல்களில் சுட்டப் பெறுதல், பழையோள் கணவ, என்பதால் புலப்படும். சேய் என்பதற்கு மகன் எனப் பொருள் கண்ட புனைவு உலகே, சிவனுக்குச் சேயாகச் செவ்வேளைப் படைத்துக் கொண்டதாம். பழையோனாம் பாண்டியனைச் 'சேய்' என்று கழக நூல்கள் குறித்தனவாம். முதுமுதல்வன் முது முதல்வி பெயர்கள் இவ்வாறு அமைந்த