உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

இளங்குமரனார் தமிழ்வளம்

15

எத்தனை எத்தனையோ நூறாயிரம் சொற்களை வழங்கிய தமிழுக்கு, நாமறிந்த சொற்களையாவது அழியாமல் காக்கும் நன்றிக்கடன் செலுத்துதல் முறைமையன்றோ.

தொல்காப்பியத்தில் நூன்மரபு, மொழிமரபு, முதலியவை உண்டு. மரபியல் என்னும் பெயராலே ஓர் இயலும் உண்டு. மரபின் சிறப்பினை இவை தெரிவிக்கும்.

மரபு என்பது யாது? முன்னவர் எந்தச் சொல்லை எந்தப் பொருளில் வழங்கினார்களோ அந்தச் சொல்லை அந்தப் பொருளில் வழங்குவதே மரபாகும். ஆதலால் மரபு ‘மயங்கா மரபு' என்றும் ‘மாறா மரபு' என்றும் சுட்டப் பெறும். மேலும், 'மரபுநிலை திரியின் பிறிது பிறிதாகும்' என்றும், மரபுநிலை திரியின் மான மில்லை” என்றும் சொல்லவும் படும்.

மொழி மரபுக்குரிய இவ்விலக்கணம் குடிமரபு அல்லது வழி மரபுக்கும் பொருந்துவதாம்.,

மரபு என்னும் சொல்வழக்கு எவ்வாறு வந்தது, ஒரு மரத்தின் வித்து அதே மரத்தை மீண்டும் தோற்றுவிக்கின்றது. அதன் தன்மையும் அப்படியே அமைகின்றது. அதனால்தான் தொல்காப்பியர் குறித்த புளியும் மாவும் அவர் சொல்லிய சுவையை நாம் இன்றும் சுவைத்து அறியுமாறும், அப்பெயர்ப் பொருத்தத்தை உணருமாறும் வாய்க்கின்றனவாம். நாளும் பொழுதும் அவை மாறும் இயல்புடையவையாயின் அவர் சொல்லியவை, நமக்குப் பொருந்தாமலே போயிருக்கும். 'கோடு வாழ் குரங்கு' மூவரி அணில்', 'மாயிருந் தூவி மயில்' என்றும் ஆல்வேல்' என்றும் அவர் சொல்லியவற்றை இன்றும் நாம் அப்படியே போற்ற முடிகின்றதாம்.

மாறா இயல்பினதாம் ஒன்றை, மரத்தைக் கொண்டு உவமை வகையால் சுட்டியதே மரபு ஆயிற்றாம். ஏனைச் செடி கொடி விலங்கு பறவைகளும் மரபு நிலை மாறாதவையே எனினும், ஒன்றை எடுத்துக்காட்டால் விளக்க முயல்வார் கொள்வனவற்றுள். நிலைத் திணைக்கே முன்னுரிமை தருதல் முறைமையாம். இயங்கு திணையோ, நிலைத்திணையின் வழிப் பட்டதேயாம். ஆதலால் மரம் என்பதைக் கொண்டே 'மரபு'

எடுத்துக்காட்டப்பட்டதாம்.

இனிக் ‘கொடிவழி' எனவும் மரபு சொல்லப்படுவதுண்டு. அதுவும் நிலைத் திணையாதல் கருதுக. ஒரு கொடியின் வேர் ஓரிடத்து இருந்தாலும் அது கொடியாய்த் தளிர்த்துப் படர்ந்து