உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

66

15 இளங்குமரனார் தமிழ்வளம்

வீறுசால்புதல்வற் பெற்றனை இவணர்க்கு

ான்'

எனவரும் பதிற்றுப்பத்து விளக்கும் (74) ‘தந்தையோடு கல்வி போம்' என்பதும் சுட்டும். கணவனுக்குக் 'கொண்ட காண்டான் என்னும் பெயருண்மையும், 'கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி என்னும் பாட்டுண்மையும் இதனை மேலும்

விளக்கும்.

பெற்றோன்,பெற்றோள் என்பவை அடிப்படைப் பொருள் கருதாமல் தந்தை, தாய் என்னும் பொருளில் வழங்கலான பின்னர், ஈன்றோன், ஈன்றோள் என்பவை ஈனுதல் நிலையாலும், பயந்தோன், பயந்தோள் என்பவை மக்களின் பயன்பாட்டு நிலையாலும் வழக்கில் ஊன்றினவாம்.

ஈன்ற பொழுதிலும் சான்றோன் எனக் கேட்டபொழுது ஈன்றாளுக்கு இன்பந்தருதலைப் பழ நூல்கள் பலவும் பாரித் துரைக்கும். ‘ஈனில் இழைத்து' (முட்டை இட்டுக் குஞ்சு பொரித் தற்காகக் கூடு அமைத்து) இன்புறும் பறவையை அகப்பாட்டுத் தெரிவிக்கும். ‘கணவர் உவப்பப் புதல்வர் பயந்ததை” மதுரைக் காஞ்சி தெளிவிக்கும். ஆகலின் காலமுறையால் தலைவன் தலைவியர் முதற்கண் பெற்றோர் ஆதலும், பின்னர் ஈன்றோர் ஆதலும், நிறைவில் ‘பயந்தோர்’ ஆதலும் முறையாய் விளங்கும். இம் முப்பெயர்க்குப் பின்னே குறைவிலா நிறை பெயராய் வருவது ‘குரவர்’ என்னும் பெயராம். குரவராவார் உள்ளொளி வாய்ந்த ஒள்ளியர் என்க. இனிப், பெற்றோரைக் ‘குரவர்’ என்பதும், முதுகுரவர் என்பதும் இருமுது குரவர் என்பதும் புதுவதன்று; பழைய வழக்காறேயாம். இவற்றுள் முன்னை இரண்டு, பெற்றோர் எனத் 'தாய் தந்தை’ அளவில் நிற்கப் பின்னைவரும் 'இருமுதுகுரவர், என்பதோ தலைவன் தலைவியர் ஆகிய இருபால் குடும்பத்து இருபெரும் பெற்றோர்களையும் சுட்டும் சீர்மையது என்பதை எண்ணின் இனிக்கும் செய்தியாம். இருமுதுகுரவர், ஏவலும் பிழைத்தேன்” என்பது கண்ணகி முன்னர்க் கோவலன் கலங்கியும் கனிந்தும், கண்ணீர் வார்ந்து முரைக்கும் உரை என்பதைக் கருதலும் தகும்! ஆதலின் பயந் தோரினும் உயர்முதுநிலை குரவர்நிலை என்பதைக் கொள்ளுதல் ஏற்புடையதாம்.

66

தலைவன் - தலைவி, கிழவன் - கிழத்தி என்பவை திருமணத் திற்கு முன்பு சுட்டப் பெறும் பெயர்கள். மணமகன் மணமகள் எனவும், பின்னர்த் திருமணத்தின் போழ்தில். கணவன் மனைவி