உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம்

சொல்

243

எனவும், துணைவன் துணைவி எனவும் ஆளன் ஆட்டி எனவும் வழங்கப்பெற்றனர். இவையெல்லாம் பெற்றோர் என்னும் பெரு நிலை எய்துதற்கு முன்னவை. ஆனால், பெற்றோர் முதலாகச் சுட்டப் பெற்றவையோ மகப்பேறு தொட்டுப் பின்னே

பெற்றவையோ

வருபவையாம்.

ன்னும் ஒரு குறிப்பே இவண் நோக்குதல் நலமாம். மகப்பேற்றின் முன்னர்த் தலைவன் தலைவி, கணவன் மனைவி எனத் தலைவனுக்கு முதன்மையும், மகப்பேற்றின். பின்னர்த் தாய் தந்தை, அம்மையப்பன் எனத் தலைவிக்கு முதன்மையும் வழங்குதல் மரபாகக் கொள்ளப்பெறுதல் என்பதாம். இப் பேறு குலம் தருதல்' என்பதால் மகளிர்க்கு வாய்த்ததாம். "குலம் தருதலாவது, புதல்வற் பயந்து மேலும் குலத்தை வளர்த்தல்” என்பதாம். (சீவக. 2141 நச்)

தாய் என்னும் முறைப்பெயரைக் காணலாம். தன்மை முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்களுக்கும் பொதுவாக அமைந்த முறைப்பெயர் ‘ஆய்' என்பதாம். அப்பெயர் தன்மையில், ‘எம் ஆய்’ எனவும், முன்னிலையில் ‘நும் ஆய்' எனவும், படர்க்கையில் ‘தம் ஆய்' எனவும் வழங்கின.

ஆய்க்கு அமைந்த இம் மூவிட முறைப் பெயர்களே பின்னர் முறையேயாய், ஞாய், தாய் என ஆயின. இவ்வாட்சி பழங்காலத்தில் மாறாமல் வழங்கின என்பது பழைய இலக்கியங்களால் அறியப்படுகின்றன. ஆனால், ஆய் என்பதன் டத்தைத் தாய்பற்றிக் கொண்டதால் எம்தாய் நும்தாய், தம்தாய் என இக் காலத்தில் வழங்குகின்றன. ஆய் என்பது ‘ஆயி’ என இகர இறுதி ஏற்று வழங்குவதும் உண்டு.

66

ஆய் என்பது போலவே 'ஓய்' என்பதும் பெற்றோள் பெயராக முன்பு வழங்கியது. ஆரண மறையோன் எந்தை அருந்ததிக் கற்பின் எம்மோய்" என்பது கம்பர் வாக்கு. “ஆய் ஓய் என்று ஏன் கத்துகிறாய்?' என்னும் வழக்கு, ஓய் என்பதன் ஆட்சி இருந்தமையை வலியுறுத்தும். எம்மோய், நும்மோய், தம்மோய் என்பன முறையே மூவிடங்களுக்கும் ங்களுக்கும் முறைமை முறைமை பூண்டு இருந்தனவாம்.

முறைப் பெயர்களாக வழங்குவனவற்றுள் பெரும்பாலனவும் விளிப் பெயர்களே! அம்மா, அப்பா, அக்கா, மாமா, தாத்தா முதலிய முறைப் பெயர்கள் விளிவடிவாகவே இருத்தல் அறிக. அடிக்கடி அழைத்து, அழைத்த பெயரே பெயராக அமைந்து