உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

இளங்குமரனார் தமிழ்வளம் 15

விட்டமையால் முறைப்பெயர்கள் விளிப் பெயராக அமைந் துள்ளனவாம்.

அம்மை, அம்மு, அம்மன் என்பவை தாயைக் குறிக்கும் பெயர்கள். இவை அம்மா என்னும் விளிவடிவாய் நின்றன. அம்ம என்பது அண்மை விளியாம் அது, “யான் சொல்வதைக் கேட்க” என்னும் பொருளில் வழங்கலாயிற்று. அதனால், “அம்ம கேட்பிக்கும்' என இலக்கணம் வகுத்தார் ஆசிரியர் தொல்காப்பியனார்.

6

குறவஞ்சி நூல்களில் அம்மே என்னும் விளிப்பெயர் பெருக வழங்கும். உலக வழக்கிலும் பெருக வழங்குவதே. 'அம்மோ' என்பதும் வழக்கில் ஊன்றியதேயாம். 'ஏ அம்மே என்பது ‘எம்மேங் என்றும், 'ஏ அம்மோ' என்பது ‘எம்மோ' என்றும் வழங்கப் பெறுதலும் எவரும் அறிந்ததே.

அம்மை என்பது அம்மா என ஆயினாற்போல, அன்னை என்னும் பெயரும் அன்னா என வழங்கும். அம்மே என்பது போல ‘அன்னே' எனவும் வழங்கும் 'ஐ' என்னும் ஈறு ‘ஆய்’ என்னும் ஈறாகும் என்பதன்படி, ‘அன்னாய்' எனவும் வழங்கும். பழநூல்களில் இது பெரிதும் வழங்கப்படுவதாம்.

அம்மோ என்பது போல அன்னோ என வழங்குதலும் உண்டு. அன்னோ என்பது 'அந்தோ' என்னும் பொருளில் வருதலும் வழக்கு, அன்னே என விளியாதல், அன்னே உன்னை யல்லால் ஆரை நினைச்சேனே" என்னும் தேவாரத்தால் தெளிவாம்.

அஞ்ஞை என்பது தாயைக் குறிக்கும் முறைப்பெயரேயாம். இது 'அஞ்ஞா அஞ்ஞா' என விளிவடிவுபெறும். அஞ்ஞை என்பது அண்மை விளியாக அமைதல் ‘அஞ்ஞை நீ ஏங்கி அழல்' எனவரும் சிலப்பதிகாரத்தால் விளக்கமாம். அஞ்ஞை என்னும் பழந்தமிழ்ச் சொல் இக்காலத்தில் ஓரினத்தில் பெருபவழக் குடையதாய், அதுவே அவ்வினத்தின் உட் பிரிவுகளுள் ஒன்றன் பெயராய் வழங்கி வருதல் அறியத்தக்கதாம்.

அம்மை, அன்னை, அஞ்ஞை என்னும் பெயர்கள் அகரம் சார்ந்த மெல்லினமாய் அமைதலையும், அப்பன், அச்சன், அத்தன் என்னும் பெயர்கள் அகரம் சார்ந்த வல்லினமாய் அமைதலையும் நோக்குவார் ஒலியியலால் பண்பியலை விளக்கிய முந்தையோர் திறத்தை இனிதின் அறிவார்.