உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் – சொல்

245

தாயைக் குறிக்கும் பெயர்களுள் ஆத்தாள் என்பதும் ஒன்றாம். அஃது இருவகை வழக்கிலும் ஒன்றியதேயாம். ஆத் தாளையும் ஆத்தாளின் ஆத்தாளையும், ஆத்தாளின் மூத்தாளையும் ஒரு பாடலில் குறிப்பார் காளமேகப்புலவர். 'ஆத்தாளை அபிராம வல்லியை” என்பது அபிராமி அந்தாதி. ஆத்தாளுக்கு அரிசிபோட்டு, எரியூட்டலுக்கு உருகுவார் பட்டினத்தார்.

அகத்துரிமை யுடையவள் யாவள்? அவள் அகத்தாளாய் பின்னர் ஆத்தாளாய் ஆனாள். அகப்பை ஆப்பையாய், தொகுப்பு தோப்பாய், உவகை ஓகையாய், அமைந்ததாற் போல அகத்தாள் ஆத்தாள் ஆனாள். அகத்துக்காரி என்பவள் ஆத்துக் காரியாய் வழங்கப்படுதலை ஒப்பிட்டுக் காண்க. அகத்துக் காரியாக இருப்பவளே இருப்பவளே ஆத்தாளாகவும் ஆத்தாளாகவும் அமைகிறாள் என்பதையும் கருதுக.

ஆத்தாள் என்பது ஆத்தா ஆத்தே ஆத்தோ என விளியாகும் ஏ ஆத்தே என்பதும் ஏ ஆத்தோ என்பதும் ஏத்தே, ஏத்தோ என வழங்கும்.

தளவை, ஒள வ என்பன அம்மையைக் குறித்தல் மூத்தவள் பெரியவள் என்பதாலேயாம். தௌவை என்பது அக் கையையும் ஒளவை என்பது தாயைப் பெற்ற தாயையும் குறிக்கும் முறைப் பெயர்களாம். சில குடும்பச் சூழல்களில் அவர்கள் தாய் நிலையையும் ஏற்க நேர்ந்த நேர்வால் இப்பெயர்கள் தாய்க்கு உரியனவாயின.

தாயைக் குறிக்கும் அம்மா, ஆத்தா என்னும் பெயர்களை பொதுவாக விளிப் பெயர்களாய் அகவை நோக்குதலும் இல்லாமல் - வழங்குதல் அறியத்தக்கது. 'வாங்க அம்மா' 'வா அம்மா' என்பன போன்ற வழக்குகளை எண்ணுக. காளியம்மா, மாரியாத்தா என்பன போன்ற பெயர்களில் அம்மா ஆத்தா என்பவை பெயரொட்டாக அமைந்தமையும் தெளிக.

இனி, அம்மையின் மூத்தாள் இளையாள் ஆகியவர்கள் பெரியம்மா, பெரியாத்தா, சின்னம்மா சின்னாத்தா, சிற்றவ்வை, சிற்றன்னை, சித்தி என வழங்குதல் எவரும் அறிந்ததே. அம்மாவின் உடன் பிறந்த இளையாள் அல்லது சிற்றன்னை நல்லம்மா, நல்லாத்தா, நல்லாயி என வழங்குதல் பழங்காலத்து வழக்கில் இருந்த நற்றாய் என்பதன் எச்சம் ஆகலாம்.

அம்மா, அம்மம்மா, அம்மம்மோ, அம்மாடியோ' அத் தத்தா, ஆத்தா, ஆத்தாடி, ஆத்தாடியோ என வழக்கில் உள்ள