உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

246

இளங்குமரனார் தமிழ்வளம்

15

உணர்ச்சிச் சொற்கள் அம்மையின் அரவணைப்பு, அணுக்கம், உருக்கம், உரிமை இன்னனபற்றி வழக்கில் ஒன்றியனவாம். அடித்தபோதும் அன்னா என்று அழும் குழவியையும், “தடித்ததோர் மகனைத் தந்தையீண்டடித்தால் தாய் அணைத் திடுதலை”யும் எவரே அறியார்?

‘தந்தை’ என்னும் பெயர்க் காரணம், முந்து கண்டோம். தந்தையை ‘அப்பா' என வழங்குவது இந்நாளில் பெரு வழக்கு. அப்பன், அப்பர், அப்பு, அப்பச்சி என்பவற்றின் விளிவடிவு, ‘அப்பா' என்பதாம். அவ் விளி வடிவே ‘அப்பா அழைக்கிறார்; 'அப்பாவுடன் போகிறேன்' எனப் பயர் வடிவாகவே வழங்குகின்றது. அப்பே, அப்போ என்பவையும் விளி வடிவுகளே. ‘ஏ அப்பே' என்பதும் 'அப்போ' என்பதும்’ஏப்பே, எப்பே, ஏப்போ, எப்போ' என வழங்குகின்றன. அப்பன் என்பது ‘அப்பனார்' என வழங்குவதும் உண்டு. அது, ‘ஐயன்’ ஐயனார் என வழங்குவது போன்றது.

முறைப்பெயராக வழங்கும் இப்பெயர் பிறரை மதித்து வழங்கும் பெயர்களாகவும் அமைகின்றன. தன்னில் முப்பரையும், இறையரையும்கூட இச்சொற்களுடன் உறவமைத்து அழைப்ப

துண்டு.

அப்பச்சி வாங்க; அப்பு வாங்க, வாங்க அப்பா, வா அப்பச்சி, வா அப்பு; வா அப்பா (வாப்பா) என்று ‘வாங்க’ வா என முதுமை இளமை கருதிய அமைப்பு அன்றிப், பெயரில் வேறுபாடு இல்லாமை அறிக.

ஐ, ஐயன், ஐயர், ஐயனார் என்பனவும் தந்தையைக் குறிக்கும். ஐயர் என்பது இவற்றின் விளி! ‘ஐயர்' என்பது சில டங்களில் தந்தையைப் பெற்றவர் பெயராகவும் வழங்கும் அப்பா என்பதைத் தந்தைக்கும், 'ஐயா' என்பதை அவரைப் பெற்றவர்க்கும் முறையாக வழங்குகின்றனர்.

அப்பசாமி, அப்புசாமி, ஐயாசாமி என்பன போல முறைப் பெயர், பெயர்வடிவில் நிற்றலும் வழக்கு. செல்லப்பன், செல்லப்பா, செல்லையா என்பன போலப் பெயரடை இவை நிற்றலும் கண்கூடு.

யாக

பரு

அப்பன் போல வழங்கும் ஒரு சொல் ‘அச்சன்’ என்பதாம். மலையாள நாட்டில் அச்சன் என்னும் பயர் வழக்கிலுள்ளது. தமிழ் நாட்டில் ஒரு காலத்தில் பெரு வழக்காக இருந்ததே, மலையாளம் தனிமொழித் தன்மையடைந்த