உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் சொல்

247

காலத்துப் பெரு வழக்காகக் கொண்டிருக்கக் கரணியமாம். எழுத்தச்சன்' என்பான் மலையாள எழுத்தை அமைத்துப் போற்றி வளர்த்த தந்தை ஆவான். ‘கண்ணச்சன்' முதலியோர் சிறப்புப் பெற்றவர். அச்சன் பற்று, அச்சன் புதூர் என்பவை தமிழகம், மலையாளம் தழுவிய ஊர்ப் பெயர்கள். இவை, வை, அச்சன் என்னும் சொல் தமிழகத்தில் முற்றாக மறையவில்லை என்பதைக் காட்டும்.

மாணிக்கவாசகர் அருளிய 'அச்சோப்பத்து' அச்சன் வழக்கின் எச்சமாம். அதன் ஒவ்வொரு பாடல் இறுதியிலும், ‘அச்சோவே' என்னும் முடிநிலை அமைந்திருத்தல் அறிக. இனி, அச்சச்சா அச்சச்சோ என்னும் உணர்வுக்குறிப்புகள் இந்நாளில் பெருவழக்குடையவை. அச்சச்சா அச்சச்சோ என்பவை ‘அப் பப்பா, அப்பப்போ, அத்தத்தோ, ஐயையா, ஐயையோ என்பவை போன்றவை.

அச்சன் போலவே ‘அத்தன்' என்பதும் தந்தையைக் குறிக்கும் பெயரே. "அத்தா! உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே” என்பது தேவாரம். அத்தன் என்னும் தந்தை பெயரே அவர் உடன் பிறந்தவளை ‘அத்தை’ என்று முறை சொல்ல வைத்ததாம். அத்தையின் மகனை ‘அத்தான்' என்று அழைக்கவும் ஏளியதாம். அம்மையின் உடன்பிறந்தவனை ‘அம்மான்” என அழைக்கும் வழக்கை அறிவோம் அல்லவோ! அந்த ‘அம்மான் சேய்' தானே ‘அம்மாஞ்சி'யாக விழிக்கிறான்!

குடும்பத்தலைவனாகிய அப்பன், ஐயன், அச்சன், அத்தன், தந்தை ஆகிய பெயர்களை உலகத் தலைவனாம் இறைவனைக் குறிப்பதாக வழங்குதல் உலகெல்லாம் தழுவிய ஒரு பெரு வழக்காம். பாடும் புலவன் அல்லது வழிபடும் அடியன் தன்னை மகன்மை முறையிலும், இறைவனைத் தந்தைமை முறையிலும் கொள்ளும் அடிப்படையில் வந்த வழக்கமே இஃதாம்.

‘சுத்த சன்மார்க்க வேண்டுகோள்' பகுதியில் வள்ளலார் இறைவனை,

'அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்”

66

'ஐயா நான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்” “அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்” “அச்சாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்"