உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

இளங்குமரனார் தமிழ்வளம்

15

என்று தந்தையின் முறைப்பெயர்கள் நான்கை வழங்கியதுடன் அண்ணாநான் வேண்டுதல் கேட் டருள்புரிதல் வேண்டும்’ என்றும் வழங்கினார். சில குடும்பங்களில் அரிதாக அப்பாவை ‘அண்ணா' என அழைக்கும் வழக்கையும் கருதலாம்.

தந்தை என்பது படர்க்கைப் பெயர். தாய் என்பது போல, அவர் அப்பா என்னும் பொருள் தருவதாம்.

என் தந்தையும், எம் தந்தையும் எந்தையாம்;

நின் தந்தையும் நும் தந்தையும் நுந்தையாம்;

நின் என்பது நுன் எனவும் உன் எனவும் வழங்கும்.

நும் என்பது உம் எனவும் வழங்கும். ஆதலால் உன் தந்தையும் உம் தந்தையும் உந்தையாம்.

உம் எம் என்பனவும், தம் நம் என்பனவும் உங்கள் எங்கள் தங்கள் நங்கள் என வருதல் பன்மைமேல் பன்மையாகிய சிறப்புப்

பன்மையாம்.

அப்பாவுக்கு முன் பிறந்தவரும் அம்மாவுக்கு மூத்த பெண்களை மணங்கொண்டவரும் பெரியப்பா, பெரிய ஐயா என வழங்கப்படுதலும், அப்பாவுக்குப் பின் பிறந்தவரும், அம்மாவுக்குப் பின் பிறந்த பெண்களை மணங்கொண்ட வரும் சிற்றப்பா, சின்னையா என வழங்கப்படுதலும் எவரும் அறிந்த செய்தி.

சிற்றப்பாவை நல்லப்பன் என்பதும் உண்டு. அவரைக் 'குட்டியப்பா' என்பதும் இளமை கருதிய பெயரே. குட்டிச் சாக்கு, குட்டிப்பை, குட்டிப் பாலர் வகுப்பு என்னும் வழக்குகளால் குட்டிக்குரிய ‘சிறியது’ என்னும் பொருள் விளக்கமாம்.