உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. வட்டம்

வட்டம் என்பது ஒரு வடிவப் பெயர். “வட்டம் சுற்றி வழியே போ” என்பது வழிநடைக்கும் வாழ்வு நடை க்கும் பொருந்திய பழமொழி. வட்டம் என்பதற்குரிய வடிவப் பொருள் விளங்க, ‘வட்டமிடுதல்' என்னும் வழக்குத் தொடர் வழங்கு கின்றது. 'பருந்து வட்டமிடுதல்' நாம் பாராததா? வட்ட மிடுதலைக் கண்ட அளவில் கோழி தன் குஞ்சுகளைக் கூவி யழைத்துச் சிறகுக்குள் ஒடுக்கிக் காப்பது நாம் நோக்காததா?

இன்று இல்லையானாலும், நாம் என்றோ ‘வட்டத்திரி' ஆடியிருப்போம். வட்டப்பாலை, வட்டணை என்பவை நம் பழங்கலைச் சொற்கள்,

வட்டத் தலைப்பா, வட்டத் தாமரை, வட்டத் துத்தி, வட்டச்சீட்டு, வட்டக் குடில் என்பவை வட்டத் தொடர்புப் பெயர்கள்.

வட்டாரம் என்பது சுற்றுப் புறமாக அல்லது சூழலாக அமைந்த நிலப்பகுதியைக் குறிப்பது. இந்நாளில் பெரு வழக்காக உள்ள வட்டம், மாவட்டம் என்பவற்றின் முற்பட்ட வழக்குச் சொல். வட்டமரம் என்பது. ஆலமரம். வட்டமாக விரிதலைக் கருதிய பெயர் அது. ‘வடமரம்' என்பது இடைக்குறையாய் ஆலமரத்தைக் குறிப்பதே.

குளம், கேடயம், சக்கரம், திரிகை, கடல், நீர்ச்சால், பரிவேடம், கடகம், விசிறி, முதலியவை வட்ட வடிவ முடையவை யாதலால் இவை 'வட்டம்' என்னும் பெயரால் வழங்கப் ‘வ படுதலை அகர முதலிகளிலும், இலக்கியங்களிலும் காணலாம். மண்ணில் அமைக்கும் பீடத்திற்கும், விண்ணில் தோன்றும் பரிவேடத்திற்கும் வட்டப்பெயர் உண்மை, வடிவு கருதியதே. குழந்தை விளையாட்டுக் கருவியாம் கிலுகிலுப்பையும், வீரர் சுழற்றியடிக்கும் கருவியாம் வளை தடியும் 'வட்டம்’

எனப்படுவனவே.