உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

இளங்குமரனார் தமிழ்வளம்

15

வட்டமாக வளைந்துள்ள நிலத்திற்கு வட்டகை என்பது பெயர். கறி வைக்கும் கிண்ணமும் சோறு வைக்கும் தட்டும் வட்டகைப் பெயர் பெறுதல் உண்டு. வட்டை என்பதும் அது, வடிவு நோக்கிச் சிறுவட்டை பெருவட்டை எனவும் வழங்கும். வட்டை, ‘வட்டா’ எனத் திரிதல் தவறான வடிவாகும். வட்டத் தட்டு, வட்டக் கலங்களையே அது குறிக்கின்றது.

வட்டி என்பது கூடை, பூந்தட்டு, கடகம் என்பவற்றைக் குறிக்கும். வட்டில் என்பது வட்டவடிவான உண்கலம், கிண்ணம், கூடை, கணைப்புட்டில் முதலியவற்றைக் குறிக்கும்.

வட்டித்தல் என்பது வளைந்து வருதல், திரும்பத் திரும்ப வருதல், சுற்றிச் சுழன்று வருதல், பரிமாறுதல் என்னும் பொருள் தருவது. 'வட்டி'யை - அதன் வரவை - வட்டித்தல் தெளிவாக விளக்குகிறது அல்லவா! 'முதலும் வட்டியும் வாங்குவேன்' என்பதற்குப் பதில், 'வட்டியும் முதலும் வாங்குவேன்' என்பது தெளிவாக்கி விடுகின்றதே.

'வட்டிவாசி' என்பது இணைச்சொல் இன்ன காலத்திற்கு இத்தொகைக்கு இவ்வளவு என்று பேசி வாங்குவது வட்டி; அது சில காலம் கொடுக்கப்படாமல் இருந்தால் அவ்வட்டிக்கு வட்டி போடுவது வழக்கம்; அதனைக் குறிப்பதே ‘வாசி’. வட்டியும்; வட்டிக்கு வட்டியும் வாங்குதலைக் குறிப்பது 'வட்டிவாசி' என்க.

6

வட்டிகை என்பதும் கூடை, வட்டம் ஆகியவற்றைக் குறிக்கும். சூதாட்டத்தில் வைக்கும் பணையப் பொருளுக்கும் வட்டிகைப் பொருள் உண்டு.

வட்டு - வட்ட வடிவமான பல பொருள்களைக் குறிக்கும். கருப்புக் கட்டியை ‘வட்டு' எனல் பெருவழக்கு. வட்டுக் கருப்புக் கட்டி எனல், சில்லுக் கருப்புக் கட்டி உள்ளமையால் வந்த ஒரு பெயர். கரும்பை ஆட்டிக் காய்ச்சிக் கட்டி எடுத்தலால், கருப் பட்டி என்பதும் (கருப்பு, அட்டி) கருப்புக் கட்டி என்பதும் தகவே, அதனை முன்னோர் ‘அட்டு' என்றனர். 'பனாட்டு' (பனை அட்டு); 'கட்டி' என்றனர் (கட்டி பூசிக் கடுத்தீற்றல்). வட்டு என்றும் வழங்கினர். வேம்பார் வட்டு' 'பெரிய வட்டு' 'சில்லு வட்டு’ ‘சிறுவட்டு' என்பனவெல்லாம் இடமும் வடிவும் குறித்து வருவன. சூதாடும் காய் ‘வட்டுக்காய்’; அது வட்ட வடிவினது. அதனால் சூதாட்டப்பணம் ‘வட்டிகை’ ஆயது. “அரங்கின்றி வட்டாடியற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டிக்கொளல் என்றார் திருவள்ளுவர். வட்டுக்காய், உருளாயம் எனவும்

6