உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம்

சொல்

251

சொல்லப்படும். அதன் வடிவு விளக்கப் பெயரே அது சுற்றிச் சுற்றி வருதலால் ‘சூழ்து' என்பதே இடைகெட்டுச் ஆயிற்று.

சூது’

உருட்டித் திரட்டிச் செய்வதும், உருண்டு திரண்டதும் வட்டு எனப் படுதலாய் உருட்டித்திரட்டிக் கட்டும் உடை 'வட்டுடை' என்க. பண்டை என்க. பண்டைப் போர் வீரர் உடை வட்டுடை என வழங்கப்பட்டது. வட்ட வடிவில் அமைந்த கைப்பைக்கு 'வட்டுவம்' என்பது பெயர். வண்டிச் சக்கரத்தில் வளைவாய் அமைந்து பட்டைக்கு அகப்பட இருக்கும் கட்டைக்கு வட்டக் கட்டை என்பது பெயர்.

வட்டம். என்பதன் சுழற்சி. 'எத்தனை வட்டம் சால்கிறது?' ‘எத்தனை வட்டம் கேட்கிறது?, 'போன வட்டம் என்ன சொன்னாய்?” என முறை அல்லது தடவை பொருள் தருவதாக வளர்ந்தது. வட்டம் ‘வாட்டி'யும் ஆயிற்று. 'போன வாட்டி' என்பதில்லையா.

'வட்டு' வண்டு ஆதலை அடுத்துத் தொடர்வோம்.

எனப்