உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. 210 L

‘வடை’யின் சுவை தமிழகம் நன்கறிந்தது. ‘வடை’ என்னும் சொல்லின் ஆய்வும் சுவையாகவே அமைந்தது

ஒரு கோயிலில் ஒரு தமிழன்பர் வழிபாட்டுக்குச் சென்றார். வடமொழி தானே கடவுளுக்குத் தெரியும்! தமிழ்நாட்டுக் கடவுள்களுக்குத் தமிழ் தெரியாது என்றல்லவோ அக்கடவுள் தலையில் கையடித்து உறுதி சொல்கின்றனர்! அதனால் வட மொழி மந்திரம் ஓதினார் பூசகர்!

தமிழன்பர், “வடவாடை வீசுகின்றதே” என்றார். “ஆமாம் வடைதான் படையலிட்டோம்" (நெய்வேத்தியம் செய்தோம்) என்றார் பூசகர்; வடவாடை (வ (வடமொழி வாடை) ‘வட’ வாடை’யாவது நல்ல அதிரடி அன்றோ!

ஓர் உணவு விடுதிக்குச் சென்ற ஒருவர் வடை வாங்கினார்; வடையைப் பிளந்தார்; பிளந்ததும், 'ஊசியிருக்கிறது' என்று முகத்தைச் சுழித்தார். பக்கத்தில் இருந்தவர் ‘ஊசி மட்டுமா இருக்கிறது? நூலும் இருக்கிறது” என்றார். அடுத்திருந்தவர் வெளியே கையேந்திக் கொண்டிருந்த ஒருத்தியைக் காட்டித் தையலுக்கு ஆகும்' என்றார்; ஊசியும் நூலும் இருந்தால் தையலுக்கு ஆகத்தானே செய்யும்! வடை பழையதானால் ஊசிப்போகும். ஆனால் தமிழ் இரட்டுறல் (சிலேடை) எவ் வளவு பழையதானாலும் ஊசிப் போகாது.

வடையுள் ஒன்று ஆமை வடை; அதன் அமைப்பைப் பார்த்தவர் ஆமையுடன் ஒப்புமை கண்டு பெயரிட்டனர். ‘ஆம வடை' எனப்பட்டாலும் கூட அதன் உவமையை வெளிப்படுத்தி விடுகிறது!

வடையுள் இன்னொன்று, ‘தவல் வடை’. தவலுக்கும் அந்த வடைக்கும் தொடர்பில்லை! தவலைக்கும் கூடத் தொடர் பில்லை, அதன் வடிவமைப்பு தவளை போலத் திருகி வளைந் திருப்பதைக் கண்டவர் ‘தவளை வடை' என்றார்! தவளையே ‘தவக்களை’யாக வடிவெடுக்க அதற்குத் ‘தவக் களை' (தவத்தின்