உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - சொல்

253

அழகு) எனப் பொருள் விரிக்கவும் அமையும்போது, தவளை வடை தவல்வடையாவது விந்தையாகுமா!

L

வடையுள் இன்னொன்று பக்காவடை.. பகு-பகுப்பு - பக்கு என்பவை பிதிர்த்து விடுதல், பிரிந்து விடுதல், பிளத்தல் ஆகிய பொருள்களில் வரும். பிசைந்த மாவை எடுத்துப் பிதிர்த்து விட்டு வேகவைத்த வடை ‘பக்குவடை' எனப்பட்டு, ‘பக்கா வடையாம்', ‘பக்கோடா’ 'பகோடா' என வழங்குகின்றதாம்! ‘பகோடா' ‘படோ' என ஆனாலும் வியப்பில்லையே!

வடமொழி' என்பதை விளக்க வேண்டியதில்லை, அப் படியே ‘தென்மொழி' என்பதையும் விளக்கவேண்டியதில்லை. ஒருவர் 'வடு அல்லாத மொழி' -வட மொழி என்று கயிறு ருட்டுகிறார்; அவருக்கு, அவர்தம் இலக்கணப் பேராசிரியர் இந்த உருட்டும் வித்தையைக் காட்டினாராம்! இனி வடநாடு னி வடவேங்கடம், வடபெண்ணை இவையெல்லாம் ‘வடு அல்லா தவை' எனப் பூரிக்கலாம்!

தயிர்வடை, பருப்பு (சாம்பார்) வடை, மிளகுநீர் (இரச) வடை, கீரைவடை, வெந்தயவடை, மிளகுவடை, கற்கண்டு வடை எனப் பலபல வடைகள் வழக்கில் இருப்பவை அவ்வப் பொருட் சேர்மானத்தை விளக்குதல் வெளிப்படை. 'வடை' என்னும் சொல்லைச் சிலர் ஆய்ந்தனர். அவர்கள் கண்ணில் ‘உளுந்து வடை’ பட்டது. அவ்வடையின் ஊடே ஓட்டை இருப்பதைக் கண்டதும், “ஆ! ஆ! வடையின் கரணியம் கண்டு விட்டோம்" என்று மகிழ்ந்தனர்! ஊடே 'வடு' இருப்பதால் (ஓட்டை இருப்ப தால்) வடு உள்ளது வடையாயிற்று என்றனர்! வடு என்ப,தற்கு ட்டை அல்லது துளை என்னும் பொருள் அவர் கண்டு விட்டதை வாளா விட்டு விட லாமா? அகராதியிலேயே இணைத்துவிட வேண்டியதுதான்!

வடை என்பதன் பொருளை ஆராய்ந்து நாற்பது ஆண்டு களுக்கு முன்னரே வெளியிட்டார் பாவாணர்.

வட்டையில் மாவை வைத்து வட்டமாகத் தட்டிப் போட்டு வேகவைப்பது தானே வடை வட்டை என்பதன் இடையே நின்ற புள்ளியெழுத்து மறைந்துவிட ‘வடை’யாயிற்று என்பது அவர் கூறும் செய்தி.

உளுந்து வடை, ஆமை வடை டை ஆகியவை வட்டையில் வைத்துத் தட்டிப் போடுவதையும், வட்டமாக இருப்பதையும் 'பார்த்தால் தெளிவாகும்!