உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம்

சொல்

261

வல்லுநர்க்கும் மூலம்! வல் விரைவுக்கும் மூலம்! இப்படி அப்படி மூலம் கடல் மேலே அலை! அலை மேலே மிதவை! மலை மேலே போகிறதா? ஆழ்பள்ளத்துள் வீழ்கிறதா? நொடிக்கு நொடி மலையேறிப் பள்ளத்துள் பாய்கிறதே மிதவை! அஞ்சுகிறானா பரதவன்? காற்றால் அலையும், அலையால் மிதவையும் என்னென்ன அலைக்கழிப்பு! அவன் உடல் அலைகின்றது! ஆடுகின்றது! ஆனால், அவன் உள்ளம் அலைகின்றதா? அலைந்தால். அலையின் தலையில் ‘IFIF என்று மிதித்து வெற்றி கொள்வானா? அவன் படகோட்டுதலுக்கு என்ன பெயர்? படகு வலித்தல் என்பது பெயர்? படகு 'வலிப்பு அவனுக்கு, எத்தனை வலிப்பை உண்டாக்கி உண்டாக்கி, வலிமையாக்கி விட்டது?

இயற்கையன்னை,

தன்னையடைந்த இயற்கைச்

சல்வங்களை தன்னை நம்பி வாழ்தற்கு வந்த உழைப்புச் செய்வர்களை வலிமையாளராக்காமல் விடுவதில்லை! அவ் வலிமையாளர் ஆக்குதற்குப் பயிற்சியாக வலி தாராமல் இருப்பதும் இல்லை!

நம் கைகள் இரண்டனுள் ஒன்றற்கு என்ன பெயர்? மிக மிகப்பயன்படுத்திப் பழக்கி விட்டோமே அக்கைக்கு என்ன பெயர்? வலக்கை என்பது பெயர்.

'வலம்' என்பதன் பொருள் வலிமை; அதற்கு, வலிமை எப்படி உண்டாகியது? வலிக்க வலிக்கப் பழக்கப் படுத்திப் பழக்கப்படுத்தி, விடாமல் வலிக்கச் செய்ததால் ‘வலம்’ பெற்று விட்டது! வலம் என்பதற்கு வலப்பக்கம், வலிமை. இவை தான் பொருளா? இல்லை பொருள் வளர்ந்தது! 'வெற்றி' என்னும் பொருளும் வந்து விட்டது! அப்பொருள் வரவு உண்டாகியது இன்றா நேற்றா? சங்கச் சான்றோர் காலத்திலேயே பெரு வழக்குச் சொல்லாகி விட்டது.

“வினைவலியும்

தன்வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல்”

மாற்றான்

வலியும்

ஒரே ஒரு குறளில் குறளில் எத்தனை வலிகள் ? இவ் வலிகள் அனைத்தும் வலிகளா? வலிமைகளா? 'ஊழிற் பெருவலி'யையும் தருகிறாரே வாழ நூல் செய்த வள்ளுவப் பெருந்தகை! வள்ளுவர் அறநூலுக்கு ‘வரைபடம்' போட்டுத்தந்த ஆசிரியர் தொல் காப்பியர் 'வயவலியாகும்' என்று பொருள் விளக்கம் புரி கின்றாரே! எள்ளில் இருந்து எண்ணெய்! இலக்கியத்தில் இருந்து இலக்கணம்! தொல்காப்பியம் இலக்கணம் அதற்கு