உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61. வலி

உட்கார்ந்தே இருந்தவர் நடக்கப்பழகுகிறார். தொடர்ந்து நடக்கிறார்; அந் நடையால் 'வலி' உண்டாகின்றது: மூட்டு வலிக்கிறது; கால் சோர்கிறது; அவரே ஓட்டமும் பயில்கிறார்; ஓடி ஓடி இளைக்கிறார்; வியர்க்கிறது! நாடித் துடிப்பு ஏறுகிறது; உடலெங்கும் உளைகிறது, வலி உண்டாகிறது: தடவிக் கொடுக்கிறார்; வெந்நீர் ஒற்றடம் வைக்கிறார்! வலிநீக்கி மருந்துண்டானால் தடவுகிறார்! ஆனால், நடையை விட வில்லை! ஓட்டத்தையும் விடவில்லை; என்ன நிகழ்கின்றது? முன்னைப்போல் சோர்வு இல்லை; இளைப்பு இல்லை; வலியும் இல்லை! இயல்பான பழக்கமாகி விட்டன! நடையும் ஓட்டமும்! எப்படி இயல்பாயின?

-

'வலி'யைத் தாங்கித் தாங்கி, 'வலிமை' உண்டாகி விட்டது! 'வலி' இல்லாமல் வலி ஏற்படாமல் - 'வலிமை' உண்டாவதில்லை! இது தமிழ்ச் சொல்லின் வேர் வழியாகக் கிட்டும் விளக்கம்; சொல், சொல்தானா? வாழ்வா?

மண்வெட்டி, கோடரி, கடப்பாறை, சம்மட்டி ஆகிய வற்றைப்பயன் படுத்தத் தொடங்கிய நாளில், சிறிது நேரத்தில் அவர் கை வலித்தது: கையில் கொப்புளம் கண்டது; அக் கொப்பளம் உடைந்தது; புண்ணானது; ஆறியது: மீண்டும் மீண்டும் இதே தொடர்! என்ன ஆனது? தொடக்கத்தே இருந்த வலிபோனது; வலிமை ஆனது? எட்டு மணிநேரம் பத்து மணி நேரம் என இக்கருவிகளைக் கொண்டு கடுமையான வேலை செய்ய முடிகின்றது! வலி கண்டு கண்டு கை காய்த்துப் போனது! காய்த்த பின்னே பழுப்பது இல்லை! நீர்க்கோப்பது இல்லை! உடைவது இல்லை) ஆம்; மனமும் உடைவது இல்லை! கையில் 'வலி' போய், மனத்திலும் 'வலி' போய், 'வலிமை உண்டாகி விட்டது. அக் கருவிப்பணி, இனி வேலை இல்லை! விளையாட்டு!

வலியை வலிமையாக்கும் வழி, வலிக்க வலிக்க விடாப் பயிற்சியே! அதனால் தான் ‘வல்' என்பது வலிக்கும் மூலம்! வலிமைக்கும் மூலம்! "வலன்' ஆகிய வெற்றிக்கும் மூலம்!