உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் – சொல்

259

ஆதல் காணக் கூடியவே. வீட்டைச் சுற்றியுள்ள ஒரு குடிச் சுற்றமும் சூழலும், வளைசல் என்பதும், விட்டைச் சுற்றிக் கட்டிய வேலி வளைவு. வளைசல், வளைப்பு எனப்படுதலும் நடை முறையில் உள்ளவை. வளைகுடா, விரிகுடாவுக்கு எதிரிடை கடல் வ ல் நீர் குடைந்து சென்ற நிலப்பகுதி வளைகுடா, விரிபகுதி, விரிகுடா, வங்காள விரிகுடா என்பது பெருவழக்கு. வளைதடி என்பதும் வளரி என்பதும் வளைகோல் என்பதும் ஒன்றே. வளைவாகச் சென்று தாக்கும் தன்மையது அது. வளைவிற் பொறியைச் சிலம்பு குறிக்கின்றது. அது மதிலகத்தமைந்த பொறிகளுள் ஒன்று (சிலப் - 15 - 207).

வளைப்பு என்பதும் மதிலையும், காவலையும், வளைத்துத் தடுத்தலையும் குறிக்கும். சூழ்ந்து கொண்டிருத்தலும் வளைப்பேயாம். வளையம் என்பது வட்ட வடிவமைப்பைக் குறிப்பதுடன் எல்லை. குளம், வட்டம், வளையல் என்பவற்றையும் குறிக்கும்.

வளைசல் (வளசல்) என்பது இடத்தைக் குறிப்பதுடன் உற்றார் உறவுப் பொருளும் தகும் “எங்கள் வளைசலில் அப்படி யெல்லாம் நடவாது” எங்கள் வளைசல் காரரெல்லாம் ஒன்று சொன்னால் ஒன்றுதான்” என்பவை வளைசல் பெருமை.

கடல் சூழ்ந்த நிலப்பகுதியை வளாகம்' எனல் பண்டை வழக்கு. 'தென்கடல் வளாகம்' என்பது புறநானூறு. வளாகம்' என்பது மடவார் வளாகம் (மடார் வளாகம்) என ஊர்ப்பகுதிப் பெயராக வழங்கி வருகின்றது. எ டு: திருவில்லிபுத்தூர், மடவார்வளாகம். இதுகால் ‘வளாகம்’ என்பது வீட்டுச் சுற்றுச் சுவர்க்கு வழக்காகி நிற்கின்றது.

-

காற்று என்னும் பொருள் தரும் சொல் ‘வளி' என்பது வளைந்து எழுதலால் அமைந்த பொருட் பெயர் அது. சூறாவளி, சூறைவளி என்பதும், சூறாவளிக் காற்று என்பதும் அறிக. 'வளிதிரிதரு திசை” என்பது புறப்பாடல். இலக்கண விளக்கச் சூறாவளி என்பது சிவஞான முனிவர் இயற்றிய இலக்கண விளக்க மறுப்பு அல்லது கண்டன நூல். வளாவுதல் என்பது வெந்நீரில் தண்ணீர் விட்டு அளவாகக் கலத்தலைக் குறிக்கும், வளாகம்’ ‘வளா' என்னும் அளவில் நிற்றல் ‘குளவளா’ என்னும் குறளால் விளங்கும் (523). வளையின் வளைவு இவ்வளவு தானா? தொகுக்கத் தொகுக்க விரிவதைத் தொகுப்ப தெப்படி?