உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

இளங்குமரனார் தமிழ்வளம்

15

மூங்கில் எப்படி வளைக்கவும் வாய்ந்தது; வளையவும் கூடியது. அதனால், அதற்கு 'வளை' என்பதும் பெயராயிற்று. 'வளைக்க வளைகின்ற வேய் (மூங்கில்) மன்னர் மாமுடியின் மேலாம்; வளையாத வேய் கூத்தர் கால் மிதி படக் கீழாம்' என்னும் பாடல் அறிந்ததே.

மூங்கில் கழிகளையே, கூரை வீட்டுச் சுவர்ச் சரமாக அமைத்தனர்; ஊடும் முகடும் கொண்டனர். அதனால், அம் மூங்கில் பெயராகிய ‘வளை' என்பது அவற்றுக்கு அமைந்து விட்டது. இப்பொழுது, எந்த மரத்தைச் சரமாக அமைத்தாலும் அவ் 'வளை' என்னும் பெயரே நின்று விட்டது.

வளை என்பதற்குச் சக்கரம் என்னும் பொருள் உண்டு. ஆழிப்படை (சக்கராயுதம்) என்பதும் அது. வளை என்பது படைக் கருவியாதல் வளை எறிந்த திருவிளையாட லால் விளங்கும்.

சங்கு வளைவுடையது. அதனால் வளை என்பது சங்கைக் குறித்தது. 'சங்கு வளையலும் வளையே; புற்றுக்கும் வளை என்பதொரு பெயர். எலி வளை, நண்டு வளை என்பவற்றின் பின் வளர்ச்சியாக எழுந்தது அது. வளைக்க என்னும் ஏவலும் ‘வளை' யாதல் அறிக; வளைந்துள்ள அகழுக்கு ஒரு பெயர் வளை என்பதாம். வளை போழ்தல் சங்கறுத்தல்.

வளைவு, வளைதல், வளைசல் (வளசல்), வளைப்பு, வளையம், வளையல், வளைகுடா, வளைமணி, வளைவிற் பொறி, வ வளைதடி, வளைகம் (தூண்டில்) வளைதல் (கோணல்), வளையாபதி இன்னவையெல்லாம் 'வளை' கலழி வந்த சொற்பெருக்கங்கள். 'வளைகாப்பு' ஒரு மங்கலச் சடங்காக ஊன்றியமை பெருவழக்காறு.

வளைவு என்பதற்குப் பணிவு, வணக்கம் ணக்கம் என்னும் பொருள்கள் உண்டாதல் வளைந்து நிற்றலும் குனிதலும், பற்றி வந்தவை, வளையும் இயல்புடைய ‘நாணல்! என்பதன் பெயர், முகம் கவிழ்ந்து நாணி நிற்கும் தன்மைக்கும் - நாணத்திற்கும் - பெயராதல் அறிக. அவ்வாறே வில்லின் இரு நுனைகளையும் வளைத்து இறுக்கும் கயிற்றுக்கு நாண் என்னும். பெயராதலும், இடுப்பைச் சுற்றிக் கட்டும் கயிற்றை அரைஞாண் என்றும், அரைநாண் என்றும் வழங்குதலும் ஒப்பிட்டறிக.

வளைதல் சுற்றிச் சுழலுதலுக்கும் நீரில் வளைந்து நீத்தடித் தலுக்கும், பகையை வளைத்துக்கொள்ளலுக்கும் வளைதலுக்கும்