உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - சொல்

257

வில் வளைவுக்கும் ஆகியது; சொல் வளைவுக்கும் ஆகியது. அவ் வில் வணக்கமும், சொல் வணக்கமும் ஒப்பாக விளங்குதல் சில இடங்களில் உண்டு என்பதை ஒப்பிட்டுக் காட்டி உய்யுநெறி தந்தார் பெரு நாவலர்!

“சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க; வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான்”

என்பது அது.

வணக்கல் என்பது வளைத்தல் பொருளது. வளையாத் தலை வணங்காமுடி'. முன்னே ‘வணங்காமுடி' என்பது மன்னர் சிறப்பு! சீப்புக்குப் படியாத் தலை, இந்நாள் வணங்காமுடிச் சிறப்பு!

வணர்தல் என்பதும் வளைதலே. யாழின் வளைவு எவரறியார்? அதன் கோட்டை ‘வணர்கோடு' என்பர்.

கொடிபோல் இடையொடு தழுவி, ஓராடல் மகள் யாழை எடுத்துச் செல்கிறாள். அதன் வனப்பை,

"வணர்கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழீஇ" என்றார் மோசிகீரனார் என்னும் சங்கப் புலவர் (புறம் 155). வட்டிலும், வண்டிலும் உள்ள வளைவு, 'வளை’வில் இல்லாமலா போய் விடும்?

வள் என்னும் வேரில் இருந்து 'வட்டு' 'வண்டு' என்பன தோன்றி வளைவுப் பொருள் தந்ததை அறிந்தோம். 'வளை என்பதன் வழியாக வரும் சொற்களில் வளைவுப் பொருள் உண்மை மிக வெளிப்படை.

வள்+ஐ - வளை: வளைவமைந்தது 'வளை' எனப்படுகிறது, கைவளை, கால்வளை, விரல்வளை என்பன காப்பு. ஆழி (மோதிரம், கங்கணம், கடகம்) என்பவற்றைக் குறிப்பன.

6

எலியின் குடியிருப்பு, நண்டின் பொந்து ஆகியவை வளை எனப்படும். நுழைவிடத்தில் இருந்து நேரே செல்லாமல் வளைந்து வளைந்து செல்வதால் உண்டாகிய பெயர் அது எலிவளை, நண்டுவளை என்பன பெருவழக்கு. ள என்பன பெருவழக்கு. 'எலிவளை ஆனாலும் தனிவளை” என்பதொரு பழமொழி. இவ்வளை 'சின்னஞ் சிறுவீடு' என்னும் பொருளது. எலிவளை போல் சிறியதாக இருந்தால் கூடத் தமக்கெனத் தனி வீடாக இருக்க வேண்டும் என்னும் கருத்தினது.

"