உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

இளங்குமரனார் தமிழ்வளம்

15

சவட்டு மண்ணால் பானை சட்டி குடம் முதலிய கலங்கள் வனைதலும் காணக் கூடியனவே. இவ்வண்டல் மண்ணும், வண்டல் பாவை வடிவும், வண்டல் இழைத்தல் ஆட்டமும் 'வளைவு தந்த வளமேயாம். வண்டல் மண் ‘வண்டலம்' எனப் படுதலும் இலக்கிய ஆட்சி.

வட்டு, வட்டி, வட்டை என்பன வளைவடியாக வந்தது போல், வண்டி, வண்டில், வண்டை முதலியனவும் வளைவு வழி வந்த சொற்களே!

வண்டி என்பது ‘சக்கரம்' (ஆழி, உருளை) ஆகும். அச் சக்கரமே வண்டியின் கால்! அதன் உருளலே வண்டிச் செலவு ஆதலால், சக்கரம் என்னும் பொருள் தரும் வண்டி என்பதே, கட்டை வண்டி, உந்துவண்டி, தொடர்வண்டி என்பனவற்றில் வரும் வண்டிப் பொருள் மூலம்!

சக்கரத்தைக் கண்டுபிடித்த கண்டுபிடிப்பே, மாந்தன் போக்குவரவு வளர்ச்சிச் சிறப்புக்கெல்லாம் தொடக்கம்! அச்சக்கரமே, உழவர் தொழிலுக்கும் அடிப்படை! கமலை வண்டி, உருளை, கட்டை வண்டி என்பன இல்லாமல் உழவர் தொழில் நடைபெறுமா? முழுமையும் மாறிப் பொறியாக வளர்ந்துவிட்டாலும் உழுபொறி, இறைவைப் பொறி, இழுவைப் பொறி இன்னவெல்லாம் வண்டியில்லாமல் நடப்பனவா? ஓடுவனவா? குழந்தையின் வண்டி ஆனால் என்ன? வளர்ந்தவர் வண்டியானால் என்ன? வண்டியில்லையேல் இயக்கமில்லையே! வண்டில்' எனினும் வண்டிப் பொருளே தரும். 'விட்டில் என்பது ‘விட்டி' என்பது போல! வண்டு இல்; இல் சொல்’ லீறு. வட்டி, வட்டில் ஒப்பு நோக்குக.

66

வண்டை என்பது வளைவு வடிவச் செடியொன்றின் பெயர். வண்டை என்பது ஊர்ப்பெயராகவும் வழங்கும். 'வண்டை வளம்பதி” வண்டை யர் கோன் தொண்டைமான் என்பவை கலிங்கத்துப் பரணி. வண்டை என்பதன் விரி வண்டலூர் என்பது, சென்னை திருச்சி நெடுஞ்சாலை - தொடர் வண்டிச் சாலை வழியில் உள்ளதோர் ஊர், வண்டல் வழியாகப் பெற்ற பெயர் அது. இன்றும், வண்டியூர், வண்டிப்பாளையம் வண்டிப் பாக்கம் முதலியனவும் வண்டி வழி வந்த ஊர்ப் பெயர்களே!

ச்

வண்டியின் வளைவு, வணக்கத்திற்கும் உதவியது.வணங்குதல் என்பது தலையை வளைத்து நிற்றல்: அவ் வேளையில், முதுகும் வளைதல் இயற்கை. அதனால் வணக்கத்திற்கு உரிய வளைவு,