உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60. வண்டு

வட்டு வளைந்த ‘வளைவை', முன்னே பார்த்தோம். வண்டு வளையும் வளைவைக் காண்போம்.

காட்டு வேலைக்குக் கஞ்சி கொண்டு போவர், அக்கல யத்திற்கு வண்டு கட்டிச் செல்வது வழக்கம். கலயத்தின் வாயை ஒரு துணியால் மூடிபோல் வளைத்துக் கட்டுதலே, வண்டு கட்டுதலாகும். இனிப்போ, நெய்யோ, எண்ணெயோ கலத்தில் இருந்தால், எறும்போ ஈயோ போய்விடாமல் இருக்க வண்டு கட்டிவைத்தல் நாட்டுப்புற வழக்கே.

தலையில் சுமை வைத்துச் செல்பவர் சுமை தலையில் அழுத்தாமல் இருப்பதற்குச் சுமையடை வைப்பது கண்கூடு. துணியைப் புரிபோல் சுருட்டி வட்டமாக்கும். அதனை ‘வண்டு’ என்பதும் உண்டு. அவ்வாறே, வைக்கோலைக் கட்டுவதற்கு விடப்படும் புரியை வட்டமாய் உருட்டித் திரட்டி வைக்கும் பந்துக்கு ‘வண்டு' என்னும் பெயரும் உண்டு. தண்ணீர்ப்பானை முதலியவற்றிற்கு அணைசாக வைக்கப்படும் புரிமணையை வண்டு என வழங்குதலும் உண்டு. இவையெல்லாம் ‘வண்டு என்பதன் வளைவு வடிவச் சான்றுகள்.

பூக்கள்தோறும் வளைந்தும் சுழன்றும், சுற்றியும் சூழ்ந்தும் வரும் தேனீ முதலிய பூச்சிகளை ‘வண்டு' என்பது, அவற்றின் வளைவியல் கொண்டேயாம். மகளிர் அணியாம் வளையலை வண் ’எனல் இலக்கியப் பேராட்சி. வளைவுடையதும் வளையல் செய்தற்குப் பயன்படுவதுமாம் சங்கு, 'வண்டு’ என்றும் வழங்கப்படும்.

மகளிர் விளையாடும் விளைய ல்களுள் ஒன்று வண்டல் இழைத்தல்' என்பது. அவர்கள் சிறுவீடு கட்டிச் சிறுபாவை செய்து விளையாடும் விளையாட்டே வண்டல் இழைத்தலாம். ஆற்றில் உருட்டியும் சுருட்டியும் கொண்டு வரப்பட்டுத் திட்டாக ஒதுங்கும் மண் ‘வண்டல்'; அவ் வண்டல் கொண்டு செய்யப்படுவது வண்டற்பாவை! இந் நாளிலும் களிமண்ணால் பிள்ளையார் செய்தலும், வண்டல் எனப்படும்