உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62. வள்ளல் அதியமான்

அரிய நெல்லிக்கனியை ஔவைக்குத் தந்து அழியாப் புகழ்கொண்ட வள்ளல் அதியமான். அவன் பெயர் அகர முதலிகள், ஆராய்ச்சி நூல்கள், வரலாற்று நூல்கள் ஆகியவற்றில் அதியமான்’ என்றும், ‘அதிகமான்” என்றும் ஒப்ப வழக்குப் பெற்றுத் தொடர்ந்து வருகின்றது. ப் பெயர்களுள் முறைமையானது எதுவெனக் காண்பதே இவ்வாய்வு.

அதியமான் முழுப்பெயர், அதியமான் நெடுமான் அஞ்சி என்பது ‘எழினி' என்றும், ‘அஞ்சி’ என்றும், 'நெடுமான்' என்றும், 'நெடுமிடல்' என்றும்' 'மழவர் பெருமான்' என்றும், அதியர்கோமான்' என்றும், பிறவாறும் சுட்டப்பெறுகிறான். இப்பெருமகனைப்பற்றிய விரிவான செய்திகள் புற நானூற்றில் பொதுளியுள்ளன. இவனைப் பெருகப் பாடிய புலவர் பெருமாட்டியர் ஔவையார் என்பதைச் சுட்ட வேண்டியதில்லை. “புறநானூற்றுப் பாடல்களில்,

66

66

66

ஆர்கலி நறவின் அதியர் கோமான்'

“அணிபூண் அணிந்தயானை இயல்தேர் அதியமான்

“மதியேர் வெண்குடை அதியர் கோமான்”

எனப் பராட்டப்பட்டுள்ளான்.

(91)

(101)

(392)

இவற்றுள் முதற்கண் உள்ள ‘ஆர்கலி நறவின் அதியர் கோமான்' என்பதில் மட்டும் பாடவேறுபாடுகள் காட்டப் பட்டுள்ளன. அவை, ‘அதிகர் கோமான்”, “உதியர் கோமான்' என்பவை. இப்பாடவேறுபாடுகள் தவறானவை என்பதை அதன் பழைய உரையே தெள்ளிதின் நிறுவுகின்றது. ‘ஆரவாரத்தைச் செய்யும் மதுவினையுடைய அதியர் கோமான்” என்பது அவ்வுரை. அன்றியும், அவ்வுரையின், முடிநிலையும், “அதியர் கோமான்! அஞ்சி! பெரும! மன்னுக எனக்கூட்டி வினைமுடிவு செய்க” என்றேயுள்ளது. ஆகலின் ஒரு காலைக்கு இரு காலை அப்பாடலின்

பாடம் அதியன்’ என்பதே என அதன்