உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

இளங்குமரனார் தமிழ்வளம்

15

பண்டையுரையாசிரியர் எழுத்தே வலியுறுத்துகின்றது. மேலும், உரையாசிரியர் காலத்திற்கு முன்னரே பாட வேறுபாடு உண்மை எனின், அவர் பாட வேறுபாட்டைக் காட்டாது இரார். இவ்வாறு பாடவேறுபாட்டைச் சுட்டிச் செல்வதும் அதற்குத்தக உரை கூறுவதும் அவர் வழக்காறாம். அவ்வாறு சுட்டாமை ஒன்றே அப்பாட வேறுபாடு உரையாசிரியர் காலத்திற்குப் பிற்பட்டது என்பதைத் தெளிவிக்கும்.

உரையாசிரியர் காலத்திற்கு முற்படவே திணை துறை வகுக்கப்பெற்று நிகழ்வும் பொறித்து வைத்த திறவோர் குறிப்பில் அதியமான்’ பெயராட்சியுண்மை பெரிதும் கருதத்தக்கது.

“அதியமான் நெடுமான் அஞ்சியை ஔவையார் பாடியது “அதியமான் நெடுமான் அஞ்சியை அவர் பாடியது

“அதியமான் தவமகன் பிறந்தவனைக் கண்டானை அவர் பாடியது

99

99

(87)

(97)

(100)

“அதியமான் நெடுமான் அஞ்சியை அவர் பாடியது

(103)

“அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் நீட்டித்தானை ஔவையார் பாடியது”

(206)

இவ்வாறே 208, 231, 235, 391, 392 ஆகிய பாடல் குறிப்புகளிலும் அதியமான்' என்றே குறிப்பிடுகிறார். இப் பத்திடங்களுள் ஒரோ ஓர் இடத்தில் மட்டும் ‘அதிகமான் நெடுமான் வஞ்சி எனப்பாட வேறுபாடு காணப்பட்டுள்ளது. வஞ்சி என்றுள்ள பாடம் காண்டே அப் கருத்தின்மையறியக் கூடுமன்றோ!

படியெடுப்பாளர்

இனி 158 ஆம் புறப்பாடலில் வள்ளல் எழுவர் பெயரும் தொடர்ந்து கூறுமிடத்துப் பெருஞ்சித்திரனார், ‘எழினி' என்றாராக, உரையாசிரியர் 'எழினி அதியமானும்' என்று விரித்து எழுதியமை நோக்குதற்குரியதாம்.

பண்டைப் பாவலர்களும், புறநானூற்று உரையாசிரியரும் அதியமான் என்னும் பெயரைச் செவ்விதிற் குறித்துப் போற்றினாராகப், பிற்காலப் படியெடுப்பாளர்களுக்கும் பதிப்பாசிரியர்களும் ஆராய்ச்சியாளர்களும் அதியமானுக்கும் அதிகமானுக்கும் வேறுபாடின்மை கொண்டு எழுதுவாராயினர். அதன் விளைவே பழம் புலவர் பாடல்களிலும் உரைகளிலும்