உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - சொல்

265

அதிகமான்’ என்று குறிக்கப்பெறலாயிற்றாம், பின்னாளைத் தனிப் பாடல்கள் ஒன்றிரண்டில் ‘அதிகன்’ ‘அதிகா’ என்று குறிக்கும் நிலையுடன் ‘அதிகை’க்கும் அதிகனுக்கும் சொல்லொப்புக் காட்டி, அதியரின் முன்னோர் ஊர் 'அதிகை' யாகலாம் என்று ஆயவும் தூண்டியதாம்! எழுத்து மாற்றத்திற்கு வயப்பட்ட ஏமாற்றங்கள் இவை என்க. வ

புறம் 158 போலவே, சிறுபாணாற்றுப்படையும், வள்ளல் எழுவர் பெயரை வரிசைப் படுத்துகின்றது. அங்கு ‘அரவக் கடற் றானை அதிகன்' எனப் பாடம் உள்ளது. நச்சினார்க்கினியர் உரையும் ‘அதிகன்' என்றே சொல்கின்றது. அதே நச்சினார்க்கினியர் தொல். புறத்திணை. 7 ஆம் பாடல் உரையில் ‘ஒருவன் மேற் சென்றுழி ஒருவன் எதிர் செல்லாது தன்மதிற் புறத்து வருந்துணையும் இருப்பின் அஃது உழிஞையின் அடங்கும். அது சேரமான் செல்வுழித் தகடூரிடை அதியமான் இருந்ததாம். என்றுள்ளது. அவ்விடத்தில் அதிகமான் என்னும் பாடவேறு பாடும் உண்டு.

ன்

குறுந்தொகை 393ஆம் பாடலில் “பாண்டியன் வினைவல் அதிகன்” என்று வரும் இடத்தில் ‘அதிகன்' என்பது பிழையாதலைப் பேராசிரியர் கந்தசாமியார் திருத்தியுள்ளார். அவர் “இராமசாமி புரம் மூவரையர் வண்ணம் பாடிய பூண்டியப்பப் புலவர் ஏடு பார்த்துத் திருந்தியது” என்று குறித்துள்ளார்.

‘எழினி’ எழுதிய புலவர் ய பாண்டியனார், ‘சேரன் சேரமான், மலையன் மலையமான், தாண்டையன் தொண்டைமான் என்றாற்போலவே அதியன் அதியமான் என வழங்கும். இவ்விரண்டனையும் அதிகன் அதிகமான், எனவும் வழங்கும்; அதியன் மரபினர் அதியர்” என்றார்.

எடுத்துக்காட்டுடன் அதியனை விளக்கிய அவர், பிறர் கோட்கூறி “அதியன் மரபினர் அதியர்” எனத் தம் கோள் நாட்டினார் ஆதல் தெளிவு. நற்றிணை உரையாசிரியர் பின்னத்தூரார் யாண்டும் ‘அதியமான்' என்றே கொண்டார்.

66

'அதியன் என்பார் குடியிற் பிறந்து சிறந்தமை பற்றி நெடுமான் அஞ்சியை அதியமான் நெடுமான் அஞ்சியென்று சான்றோர் கூறியுள்ளனர். அதியமான் என்பது அதிகைமான் என்றும் சில ஏடுகளில் காணப்படுவதுபற்றி, அதியர் என்பது அதிகையர் என்பதன் திரிபு என்றும் ஒரு காலத்தில் இவர் அதிகையென்னும் ஊரில் வாழ்ந்திருந்து பின்னர்ச் சேர