உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63. வள்ளல் ஓரி

பண்டைத் தண்டமிழ் வாணர்களால் வள்ளல்களாகச் சிறப்பிக்கப்பெற்ற எண்மருள் ஒருவன் ஓரி; அவன் கொல்லி மலைக் கோமான்; வில்லாண்மைச் சிறப்பால் 'வல்வில் ஓரி' என வழங்கப்பெற்றவன்; ஆதன் ஓரி என்று சுட்டப்பெற்றவன்; படைகொண்டு வந்த முள்ளூர் மன்னன் காரியோடும் பொருது புகழுடம் பெய்தியவன். இவனுக்கமைந்த ஓரிப் பெயர்க் கரணியம் காண்போம்.

66

ஓர்’ என்னும் முதனிலையுடன் ‘இ' என்னும் இறுதி நிலை இணைந்த பெயரே இது. ஒன்று என்பது ஓர் என்றும் ஒரு என்றும் வருதல் தொல்பழ வழக்கே. (தொல் எழுத். 437, 438). 'ஒன்று' என்பது ‘ஒன்று' என்னும் கண்ணுப் பெயராவதுடன், ஒரு பேராற்றலைக்' குறிப்பதாகவும் வழங்கி வருகின்றது உலகத்தை ஒன்று இயக்குகிறது' என்பது உலகளாவிய கொள்கை. அந்த ஒன்றற்கு உருவம் தர விரும்பியவர்கள் ஒருவன்' ஆக்கினர். ‘ஒருவன் துணை”, ‘ஒருவனே தேவன்', ஒருவன் பார்த்துக் கொண்டே இருக்கிறான்' என்னும் இருவகை வழக்குகளையும் கருதுவார் ஒருவன் எனப் பெறுபவன் இறைவன்' என்பதை அறிவர்.

ன்

'ஒன்று' எனப்பெறும் எண், ‘முதல்’ எண்; ஆதி எண் என்பதும் அது; ஆதலால் இறைவன் ‘முதல்' 'முதல்வன் ஆதிபகவன்' ‘ஆதி' என வழங்கவும் பெற்றான். மேலும் 'நான், நீ, என்னும் தன்மைப் பெயரும் முன்னிலைப் பெயரும் ஒழிந்த, படர்க்கை ஒருமைப் பெயராகிய ‘அவன்' என்பது, வழிநிலைப் பெயர்ச் சொல்லாக வாராக்கால், இறைவனையே குறித்தலும் வழக்கு. “அவன் இருக்கிறான்’ ‘அவன்மேல் பாரத்தைப் போட்டு விட்டு ஆவதைச் செய்யுங்கள்' என்பனவெல்லாம் வழக்கில் உள்ளனவே. அவனன்றி அணுவும் அசையாது' என்று சொல்லா தவர் இல்லை.