உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

இளங்குமரனார் தமிழ்வளம் 15

‘ஒன்று” என்பது ஒன்றுவிக்கும் ஊழைக் குறிப்பது தொல் காப்பியத்தால் அறியப்பெறும். தலைவனையும் தலைவியையும் ஒன்றுபடுத்தும் ஊழ், தலைப்பட்டுச் செயலாற்றுகிறது அதனை,

66

'ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி உயர்ந்த பால தாணையின்

ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்'

என்பார்.

ஒன்று, தனி ஆழி”

(தொல், பொருள், களவு. 2)

(சிலப். 27. 136)

உருவப் பல்பூ ஒரு கொடி வளைஇ

(நெடுநல். 113)

(தொல். எழுத். 12)

(புறம். 76)

ஆனின் னகரமும் அதனோர் அற்றே”

ஒருதானாகிப் பொருதுகளத் தடலே'

ஓர் என்பதன் வழியாக ஓர்தல், ஓர்ப்பு, ஓர்வு, ஓரம், ஓரை முதலியனவும் ஓரி' என்பதும் பிறக்கும்.

ஓர்தல் என்பது ஆராய்தல், கூர்ந்துகேட்டல் ஆகிய பொருள்களைத் தரும். ஒருமுகப்பட்ட கூர்ப்பின் அடிப்படையில் ஆய்வு உண்டாகுமே அன்றிப் பலவகையாகச் சிதறிய புலனால் அறிவும் கேள்வியும் தலைப்படா. ஓர்தல் என்பது கருத் தின்றிக் கேட்டலைக் குறியாமல் கூர்ந்து செவியைத் தீட்டிக் கேட்டலையே குறிக்கும்; ஓர்வு என்பதும் ஓர்தல் போன்றதே

யாம்.

‘திரிபுரி நரம்பின் தீந்தொடை ஓர்க்கும்”

“மாதர் வண்டின் நயவருந் தீங்குரல் மணநாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும்'

“நறஞ்சே றாடிய வறுந்தலை யானை

நெடுநகர் வரைப்பில் படுமுழா வோர்க்கும்

(பட். 254)

(நற். 244)

(புறம். 68)

ஓர்ப்பு என்பது ஆடவர் இயல்நலம் நான்கனுள் ஒன்று. மற்றையவை அறிவு. நிறை, கடைப்பிடி என்பன: ஓர்ப்பாவது மனத்திடன்; ஓர்மம், ஒர்மை, ஓர்மிப்பு என்பனவும் இதுவே. ஐம் புலனும் ஒன்றாகச் செலுத்த வல்லார்க்கல்லது மனத்திடன் வாராதே! "ஐம்புலனும் வென்றான் தன் வீரமே வீரமாம்" என்பதை நோக்குக.