உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் சொல்

269

ஓரம், நடுநிலைச் செல்லாது ஓரஞ் செல்லுதலும் ஓரமாம்; அஃதாவது ஒருபால் கோடல். நடைவழிக்கு உரியது நடுவு நிலை வழிக்கும் ஆகியது. ஓரஞ் செல்லல் சாலை விதி; ஓரஞ் சொல்லல் சால்பாளர் பழிக்கும் விதி. ஒரு மரத்திரு கவடாய் வந்தது ஓரச் சொல். ஓரக்கண், ஓரப்பார்வை, ஒருசிறை, ஒருச்சாய்தல் என்பனவும் ஓரப் பொருளில் வருவனவே.

ஓரை என்பது மகளிர் விளையாட்டும், விளையாடும் டமும், விளையாடும் மகளிரும், விளையாடற்காம் பொருளும் முதலியவற்றைக் குறிக்கும். ஒத்த பருவத்து ஓருணர்வொன்றிய மகளிர் உவகைப் பெருக்கால் ஒன்றுபட்டு ஆடும் ஆடற் குறிப்பால் ஓரையாயிற்று. விளையாடும் மகளிரை, ஓரை மகளிர்' என்றும் (குறுந். 316), அவர்கள் கூட்டத்தை ‘ஓரை ஆயம்' என்றும் (குறு. 48) கூறுவர். ஓரை மகளிரின் ஒப்பாந்தன்மையை, "உடன் பிறந்து உடன் வளர்ந்து. நீர் உடனாடிச் சீர் உடன்பெருகி, ஓர் உடனாட்டப்பால் உடன் உண்டு. பல் உடன் எழுந்து, சொல் உடன் கற்றுப் பழமையும் பயிற்றியும் பண்பும் நண்பும் விழுப்பமும் ஒழுக்கமும் மாட்சியும் உடையார்” என்னும் களவியல் உரையால் நன்கு அறியலாம் (2).

ஓரை என்னும் மற்றொரு பொருள் பொதிந்த சொல்லும் உண்டு; நாளும் கோளும் நல்லனவாகவும் எல்லா நலங்களும் னிது இயைப்பனவாகவும் கணியரால் தேர்ந்துகொள்ளப் பெறும் 'முழுத்தமே' ஓரை என்பதாம். இதனால், ஓரை முழு நிறை பொருள்பொதி செந்தமிழ்ச் சொல்லாதல் கொள்க. முழுத்தம்' என்னும் வழக்கு இன்றும் வழக்கில் இருக்கவும் ‘முகூர்த்தத்தில்' முழுக்காடும் மக்கள் தமிழறிந்தோர் ஆகார்.

66

இனி ‘ஓரி' என்பதைக் காண்போம். “ஓரி” என்பது ஒன்று என்பதையும், தனித்துத் திரியும் விலங்கையும், ஒரு பெற்றோர்க்குப் பிறந்த தனிமகவையும், ஒரு தானாக ஓங்கிய ஒரு திறலோனையும் குறிக்கும். இவற்றின் வழியே பலபல பொருள்களும் கிளைத்துப் பெருகும்.

'ஓரிப் புதல்வன்' என்னும் கலியையும் (114) "ஓரி மாங்காய்” என்னும் குழந்தைப் பாட்டையும், 'ஓரி, ஈரி' என எண்ணும் சிறார் ளையாட்டையும் எண்ணுக. ஒரு குடிக்கு ஒரு மகவாகப் பிறந்தார்க்கு ‘ஓரி' எனப் பெயர் சூட்டல் வழக்குண்மையும் கருதுக.