உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

இளங்குமரனார் தமிழ்வளம்

15

கூட்டத்தில் இருந்து பிரிந்து ஒரு கோட்பாட்டால் தனித் துறையும் குரங்கு, நரி முதலியவற்றையும், பொதுவாக விலங்கின் ஆணையும், ஓரியென்னும் வழக்குண்மை அறிக.

“அழல்வாய் ஓரியோ டறுகை பம்பி”

“வெவ்வாய் ஓரி முழவாக

என்பன நரியையும்,

‘அணிநிற ஓரி”

“புன்றலை ஓரி”

“நீனிற ஓரி”

99

(பட். 257)

(சீவக.)

(புறம். 109)

(குறுந். 221)

(LDOMOV. 524)

என்பன குரங்கையும் குறிப்பன. 'பாய்ந்தும் தாவியும் செல்லுதலில் வல்ல குரங்கும் நரியும் 'ஓரி' என்றாற் போலவே. ‘குதிரை என்பதற்கும் ஓரிப் பெயர் இருந்திருக்க வேண்டும்! அவ் விலங்குகளினின்று குதிரையாம் ‘ஓரி'யைத் தனித்துக் காட்டற்கே ‘ஓரிக் குதிரை’ (சிறு. 111) என்றார் போலும்” எனக் கருத நேர்கின்றது. தனித்த ஆண் விலங்கைக் குறிக்கும் ‘ஓரி' என்னும் சொல் பின்னர் ஆண் மக்கள், ஆண் விலங்கு இவற்றின் மயிரையும் குறிக்கலாயிற்று.

“ஊட்டுளை துயல்வர ஓரி நுடங்க”

“மேல்பால் உரைத்த ஓரி”

இனி, ஓரி என்பான்

(பொருந. 164)

(பெரும். 172)

காடை யாண்மை, 'மழவர்

என்பன

பெருமகன் மாவள் ஓரி” (நற். 52) “மாரி வண்மகிழ் ஓரி” (நற். 265) "திண்தேர்க் கைவன் ஓரி” (குறுந். 199) “கருவி வானம் போல வரையாது வழங்கும் வள்ளியோய் (புறம். 204) வற்றால் புலப்படும் இத்தன்மையால் ஓரி உலவாக் கொடை வள்ளல்களுள் ஒருவன் ஆனான். ஆனால், அவன் படையாண்மை யாலேயே ஓரிப் பெயர் பெற்றான்.

'வல்வில் ஓரி" (நற். 6; குறுந். 100; அகம். 109) புறம். 158. ("பழம் விறல் ஓரி” (நற். 320) "அடுபோர் ஆனா ஆதன் ஓரி” (புறம். 153) இவை ஓரியின் படையாண்மைக் குறிப்புகள். ஆயின் இவற்றால் அவன் ஒப்பற்றவன் என்று உறுதி செய்தற்கு இல்லை! என்னெனின், இவ்வாண்மை வேந்தர்க்குப் பொதுத் தன்மையேயாம். ஓரிக்கெனச் சொல்லும் சிறப்பாண்மை அன்றாம். அவனுக்கென அமைந்த, அவன் ஒருவனுக்கே